ஆசிய ஹாக்கி: மலேசியாவை 5-0 என எளிதில் வென்றது இந்தியா!

இந்திய ஹாக்கி  அணி
இந்திய ஹாக்கி அணிESPN

சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா, மலேசியாவை 5-0 என்ற கோல் கணக்கில் எளிதில் வென்றது. இதையடுத்து இந்தியா 7 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

முன்னதாக இந்தியா-ஜப்பான் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்த்து. இந்தியாவுக்கு ஏராளமான பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

எனினும் மலேசிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தொடக்கத்தில் இருந்தே ஆக்ரோஷத்துடன் ஆடியது. ஆட்டம் தொடங்கிய 15 வது நிமிடத்தில் இந்திய அணியின் கார்த்தி செல்வம் முதல் கோலை போட்டு கணக்கை தொடங்கினார். ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் ஹர்திக், பெனால்டிக் கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இரண்டாவது கோல் போட்டார்.

ஆட்டம் விறுவிறுப்பாக சென்ற நிலையில் கேட்ன் ஹர்மன்ப்ரீத் சிங் மூன்றாவது கோலை போட்டார். அவர் அடித்த பந்து, கோல் கம்பம் மற்றும் கோல் கீப்பருக்கு நடுவே சீறிப்பாய்ந்து சென்றது. இதையடுத்து இந்தியா 3-0 என்று முன்னிலை பெற்றது.

அடுத்து மந்தீப்பிடமிருந்து கிடைத்த பந்தை குர்ஜன் திறமையாக கோலுக்குள் அனுப்பி நான்காவது கோலை உறுதிசெய்தார். பின்னர் ஜுக்ராஜ் சிங், பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஐந்தாவது கோலை போட்டார்.

மலேசிய அணியும் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிறப்பாக ஆடியபோதிலும் இந்திய அணியின் தற்காப்பு ஆட்டத்தின் விளைவாக மலேசியாவில் எளிதில் கோல் போட முடியவில்லை. இந்திய அணி வீர்ர்கள் ஒருங்கிணைப்பான அணுகுமுறையின் விளையாடி மலேசியாவின் முயற்சியை தடுத்தனர். இந்திய அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், திறமையாக மலேசியாவின் கனவுகளை தகர்த்தார்.

இந்த வெற்றி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமாக இருந்த்து. ஏனெனில் ஜப்பானுக்கு எதிரான ஆட்டம் டிராவில் முடிந்தது இந்திய அணிக்கு ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது. எனினும் இந்தியா மீண்டு எழுந்து மலேசியவுக்கு எதிரான போட்டியில் உறுதியுடன் விளையாடி 5-0 என்ற கோல் கணக்கில் வென்றனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் 3-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானுடன் டிரா செய்தது. சீனா-தென்கொரியா இடையிலான போட்டியும் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com