ஆசிய ஹாக்கி: ஜப்பானுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்யுமா இந்திய அணி?

ஆசிய ஹாக்கி: ஜப்பானுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்யுமா இந்திய அணி?

சிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில் வெள்ளிக்கிழமை மூன்று முறை சாம்பியனான இந்திய அணி ஜப்பானை எதிர்த்து மோதுகிறது.

ஆசிய சாம்பியன் ஹாக்கிப் போட்டியில் முதல் கட்டமாக நடந்த ரவுண்ட் ராபின் சுற்று நிறைவடைந்த நிலையில் இந்தியா, மலேசியா, தென்கொரியா, ஜப்பான் அணிகள் அறையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின. எனினும் மூன்று முறை சாம்பியனான பாகிஸ்தான், சீனா அணிகள் தகுதிபெற தவறிவிட்டன.

இதையடுத்து அடுத்த கட்டமாக அரையிறுதி போட்டி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஜப்பானை எதிர்கொள்கிறது. ஏற்கெனவே லீக் போட்டியில் இரு அணிகளும் மோதியபோது 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவானது.

அந்த சுற்றில் தோல்வியே காணாத இந்தியா, ஜெயிக்க முடியாத ஒரே அணி என்றால் அது ஜப்பான்தான். எனவே இன்றைய அரையிறுதியில் ஜப்பானுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

இதுவரை நடந்துள்ள போட்டிகளில் 20 கோல்கள் அடித்திருக்கும் இந்தியா, ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் கிடைத்த வாய்ப்புகளை கோல்களாக மாற்ற முடியாமல் திணறியது. அந்த போட்டியில் 15 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்த போதிலும் ஒரு கோல் மட்டுமே இந்தியாவால் போட முடிந்த்து.

எனவே இன்றைய அரையிறுதியில் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை திறமையாக கையாள்வதுடன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவமே இந்திய அணியின் பிரதான நோக்கமாகும் என்று அணியின் பயிற்சியாளர் கிரெய்க் ஃபுல்டன் தெரிவித்துள்ளார்.

தரவரிசை அடிப்படையில் இந்தியா 4, ஜப்பான் 19 என்று இடைவெளி மிகப்பெரியதாக இருந்தாலும் ஜப்பான் அணியை சாதரணமாக கருதிவிட முடியாது.

கடந்த 2021 ஆம் ஆண்டு போட்டியில் ஜப்பான் அணியை குழு போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்திய அணி, அரையிறுதியில் அதே அணியிடம் 3-5 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com