டி20 உலக கோப்பையில் இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
டி20 உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் சுற்று போட்டியில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதின. இந்த உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12ல் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இலங்கையை வீழ்த்தியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது.

இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஸ்டாய்னிஸ் அதிரடியால் ஆஸ்திரேலிய அணி 16 புள்ளி 3 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 158 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இதனால் டி20 உலக கோப்பையில் இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று புள்ளி கணக்கை துவங்கியுள்ளது.