சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் அறிவிப்பு!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் அறிவிப்பு!

ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் பிப்ரவரி 9ம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு தலைமை வகித்து, டி20 உலகக் கோப்பையை வென்றார். அதன் பின்னர், கடந்த 2022ம் ஆண்டு டி20 உலக கோப்பை சொந்த மண்ணில் நடைபெற்ற நிலையில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறாமல், பெரும் தோல்வியுடன் முதல் சுற்றிலேயே வெளியேறியது. இதன் காரணமாக பிஞ்ச் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி டி20 கிரிக்கெட்டுக்கு புதிய கேப்டனை தேர்வு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆரோன் பிஞ்ச் கருத்து தெரிவிக்கும்போது, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் தான் விளையாட முடியாது என தான் நினைப்பதாகவும், அதனால் இதுவே தான் ஓய்வு பெறுவதற்கு சரியான தருணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஓய்வின் மூலம், என்னுடைய குடும்பத்திற்கும், சக அணி வீரர்களுக்கும், பயிற்சியாளருக்கும், ரசிகர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்து கொண்டதோடு, தனது அணி மகத்தான வெற்றியைப் பெறவேண்டும் என்பதை நோக்கியே நாங்கள் போட்டியில் பங்கேற்று வருகிறோம். இதற்கு முன்னதாக 2015ஆம் ஆண்டு உலக கோப்பை மற்றும் 2021 டி20 உலக கோப்பையை வென்றது மறக்க முடியாத தருணம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக 12 ஆண்டுகள் விளையாடியுள்ள ஆரோன் பிஞ்ச் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com