ஆஸி.ஓபன் பாட்மிண்டன்: 2வது சுற்றில் பி.வி.சிந்து, பிரணாய், ஸ்ரீகாந்த்!

 ஸ்ரீகாந்த்
ஸ்ரீகாந்த்

ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியவின் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். சமீபத்திய போட்டிகளில் முதல் சுற்றிலேயே தோல்விகண்ட சிந்துவுக்கு இது ஆறுதல் அளிக்கும் விஷயமாகும்.

ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு முறை பதக்கம் வென்ற பி.வி.சிந்து உலக தரவரிசையில் 17-வது இடத்தை பெற்றுள்ளார். முதல் சுற்று போட்டியில் அவர் உலகின் 47-வது இடத்தில் உள்ள அஷ்மிதா சாலிஹாவை 21-18, 21-13 என்ற கணக்கில் வெற்றிபெற்றார். சிந்து அடுத்த சுற்றில் மற்றொரு இந்தியரான ஆகர்ஷி காஷ்யபை (உலக தரவரிசையில் 40-வது இடம்) சந்திக்க இருக்கிறார்.

தொடர்ந்து சில போட்டிகளில் தோல்வியையே சந்தித்து வந்த பி.வி.சிந்து ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் தனது முழு திறமையை வெளிப்படுத்தி மீண்டு எழ திட்டமிட்டுள்ளார்.

ஜப்பான் ஓபன் போட்டியில் முதல் சுற்றில் சீனாவின் ஜாங் யீ மன் இடம் அவர் தோல்வி அடைந்தார். இந்த ஆண்டு உலக அளவில் நடந்த போட்டிகளில் அவருக்கு கிடைத்த 7-வது தோல்வியாகும் இது. கொரியா ஓபன் போட்டியில் முதல் சுற்றில் சீன தைபே வீர்ர் பாய் யு போவிடம் தோல்வி அடைந்த பி.வி. சிந்துவுக்கு ஜப்பான் ஓபன் போட்டி தோல்வி இரண்டாவதாகும்.

இதனிடையே ஆடவர் பிரிவில் ஹெச்.எஸ். பிரணாய், கிடம்பி ஸ்ரீகாந்த் ஆகியோரும் இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனர்.

ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ளார் பிரணாய். ஹாங்காங் வீர்ர் கொங்ஸ் லீ செக் யியுவை 21-18, 16-21, 21-15 என்ற செட் கணக்கில் பிரணாய் வென்றார்.

மற்றொரு போட்டியில் உலக தரவரிசையில் 19- ஆம் இடத்தில் உள்ள கிடம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானிய வீர்ர் கென்டா நிஷிமோடோவை ( உலக தரவரிசையில் 14-வது இடம்) 21-18 மற்றும் 21-7 என்ற செட் கணக்கில் வெற்றிகண்டார்.

இளம் வீர்ரான பிரியன்ஷு ரஜாவத்தும் முதல் முறை களத்தில் இறங்கிய நாதன் டாங்கை 21-12, 21-16 என்ற செட் கணக்கில் வென்றார்.

ஆகர்ஷி காஷ்யப், மலேசிய வீர்ர் கோஹ் ஜின் வீயை 21-15, 21-17 என்ற செட் கணக்கில் வென்றார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் சுமீத் ரெட்டி, அஸ்வினி பொன்னப்பா ஜோடி ஜப்பானின் ஹிரோகி மோரிகாவா- நட்ஸு ஸைடோ ஜோடியிடம் 13-21, 12-21 என்ற நேர் செட்டுகளில் தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு வெற்றிபெறுவது முக்கியமானது. அப்போதுதான் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com