ஆஸ்திரேலியன் பாட்மிண்டன் போட்டி: அரையிறுதியில் வெளியேறிய இந்திய வீரர்கள்!

பி வி சிந்து
பி வி சிந்து

ஆஸ்திரேலியன் ஓபன் சூப்பர் 500 பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் பிரிவில் பிரணாய் மற்றும் இளம் வீர்ர் பிரியன்ஷு ரஜாவத் இருவரும் அரையிறுதியில் நுழைந்தனர்.

நட்சத்திர வீராங்கனையான பி.வி. சிந்து, ஆடவர் பிரிவில் ஸ்ரீகாந்த் இருவரும் அதிர்ச்சித் தோல்வி அடைந்தனர்.ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சாம்பியனான ரஜாவத், முதல் முறையாக சூப்பர் 500 போட்டியில் அரையிறுதிக்கு நுழைந்துள்ளார். இவர் காலிறுதியில் சக இந்திய வீர்ரான கிடம்பி ஸ்ரீகாந்தை 21-13, 21-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றியை கைப்பிடித்தார்.

உலகின் 9 ஆம் நிலை ஆட்டக்காரரான பிரணாய்,  உலகின் 2 ஆம் நிலை ஆட்டக்காரரான இந்தோனேசியாவின் சினிசுகா ஜின்டிங்கை 16-21, 21-17, 21-14 என்ற செட் கணக்கில் வென்றார். முதலில் சற்று பின்னடைவை சந்தித்தாலும் பின்னர் சுதாரித்து ஆடி வெற்றிபெற்றார்.

இதனிடையே இரண்டு முறை ஓலிம்பிக் பதக்கம் வென்ற, தொடர் தோல்வியால் 17-வது இடத்துக்கு தள்ளப்பட்ட பி.வி.சிந்து, மகளிர் ஒற்றையர் காலிறுதியில், அமெரிக்க வீராங்கனையும் உலகில் 12 ஆம் நிலை ஆட்டக்காரருமான பெய்வென் ஜாங்கிடம் 12-21, 17-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.

இதுவரை 10 ஆட்டங்களில் பெய்வென் ஜாங்கை சந்தித்துள்ள பிவி.சிந்து, அவரை 6 முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2020 ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பெய்வென் ஜாங்கை சிந்து தோல்வியடையச் செய்தது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய ஆட்டத்தில் சீனாவில் பிறந்த அமெரிக்கரான பெய்வென் ஜாங்கை எதிர்த்து ஆடுவதில் சிந்து மிகவும் சிரமப்பட்டார். பெய்வென் ஜாங், ஆட்டம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதியிலிருந்து 27 ஆம் தேதிவரை டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடக்க இருக்கும் நிலையில் சிந்து தோல்வி அடைந்துள்ளது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com