பாரிஸ்டோவ் அதிரடி ஆட்டம், மார்க் வுட் பந்துவீச்சில் ஆஸ்திரேலியா திணறல்!

ஆஷ்ஸ் கோப்பை
ஆஷ்ஸ் கோப்பை

ஷஸ் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து சிறப்பாக ஆடி முன்னிலை பெற்றது.

இங்கிலாந்தின் பாரிஸ்டோவ் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் குவித்ததும், இரண்டாவது இன்னிங்ஸில் மார்க் உட் சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலியா ரன் குவிக்காமல் கட்டுப்படுத்தியதும் மூன்றாம் நாள் ஆட்டத்தின் சிறப்பு அம்சங்களாகும்.

ஆட்ட இறுதியில் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது. எனினும் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 162 ரன்கள் பின்தங்கியே இருந்தது.

மார்க்வுட், ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா (18), ஸ்டீவ் ஸ்மித் (17) மற்றும் டிராவில் ஹெட் (1) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட இறுதியில் மார்னஸ் 44 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

முன்னதாக ஜானி பாரிஸ்டோவ் அதிரடியாக ஆடி 99 ரன்கள் குவித்தார். இதில் 10 புவண்டரிகளும் நான்கு சிக்ஸர்களும் அடங்கும். எனினும் ஜேம்ஸ் ஆண்டர்ஸன் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கிரீன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூவாகி அவுட்டானதால் பாரிஸ்டோவ் சதம் எடுக்க முடியாமல் போன்து. இதையடுத்து இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 592 ரன்கள் குவித்தது. ஆஷஸ் போட்டியில் 1985 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக ரன்கள் எடுத்தது இந்த போட்டியில்தான்.

ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் விக்கெட் விழுந்தது. தேநீர் இடைவேளைக்கு முன்னதாக வுட் வீசிய பந்தை அடிக்க முற்பட்டு பாரிஸ்டோவிடம் காட்ச் கொடுத்து உஸ்மான் கவாஜா 18 ரன்களில் அவுட்டானார்.

இது மார்க் வுட்டுக்கு 100 வது விக்கெட்டாகும். அடுத்து வோக்ஸ் வீசிய பந்தில் டேவிட் வார்னர் 28 ரன்களில் அவுட்டானார். ஸ்ட்வீ ஸ்மித் 17 ரன்களிலும்,  டிராவிஸ் ஹெட் 1 ரன் எடுத்த நிலையில் மார்க் வுட் பந்து வீச்சில் வீழ்ந்தனர்.ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com