பொறுப்பில்லாத ஆட்டம்: இந்திய வீர்ர்கள் மீது ஹர்திக் காட்டம்!

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததற்கு முன்னிலை பேட்ஸ்மென்கள் சரியாக விளையாடாததே காரணம் என்று கேப்டன் ஹர்திக் பாண்டியா குற்றஞ்சாட்டினார்.

கயானாவில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியினர் முதலில் நிலைகுலைந்து போனாலும் பின்னர் சுதாரித்து ஆடி வெற்றியை கைப்பிடித்தனர். இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தியா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரண்டு அணிகளுக்கும் சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. டாஸ் ஜெயித்த இந்திய அணி பேட் செய்ய முன்வந்தது. எனினும் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் அந்த 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள்தான் எடுத்தது. திலக் வர்மா மட்டும் நின்று ஆடி அரை சதம் எடுத்தார். அவருக்கு இது இரண்டாவது போட்டியாகும்.

எனினும் இந்திய அணியினரின் ஆட்டம் சொல்லும்படியாக இல்லை. சுபம் கில், இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா மற்றும் சஞ்சு சாம்சன் உள்ளிட்ட அனைத்து முன்னணி வீர்ர்களும் எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை. முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணியினர் தொடக்கத்தில் சிறிது சறுக்கினாலும் பின்னர் சமாளித்து ஆடி வெற்றியை கைப்பிடித்தனர். அந்த அணியின் நிக்கோலாஸ் பூரன் அதிரடியாக ஆடி 40 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். பூரன் அவுட்டாகிய நிலையிலும் அல்ஜார்ரி ஜோசப் மற்றும் அகீல் ஹோஸன் இருவரும் அணியை வெற்றிப்பாதைக்கு எடுத்துச் சென்றனர்.

இந்திய பந்துவீச்சாளர்கள், குறிப்பாக யஜுவேந்திர சாஹல் மற்றும் அர்ஷ்தீப் சிங் கடுமையாக போராடி பந்து வீசி தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். எனினும் மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றியை அவர்களால் தடுக்க முடியவில்லை.பின்னர் பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, இந்திய அணி சிறப்பாக விளையாடி இருந்தால், 170 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், சரியாக விளையாடாததுதான் தோல்விக்கு காரணம்.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இரண்டாவது போட்டியில் நமது வீர்ர்கள் பொறுப்புடன் ஆடவில்லை. இதுவே தோல்விக்கு முக்கிய காரணம் என்று காட்டமாக கூறினார்.பொதுவாக ஒரு அணி முன்னிலையில் இருக்கும் 7 ஆட்டக்காரர்களை நம்பித்தான் இருக்கிறது. மேலும் பந்துவீச்சாளர்களும் தங்கள் பங்குக்கு விக்கெட்டை சாய்ப்பார்கள். ஆனால், இந்திய அணி வீர்ர்கள் பொறுப்புடன் செயல்படவில்லை என்றார்.

தற்போது இந்திய அணி வீர்ர்களின் பேட்டிங் ஆர்டர் நன்றாகவே இருக்கிறது. முதல் 7 ஆட்டக்காரர்கள் முயற்சி செய்தால் நன்றாக விளையாட முடியும். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினாலும், பேட்ஸ்மென்கள் பொறுப்புடன் ஆட வேண்டும் என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com