சூர்யகுமாருக்கு குட்டு! ரோஹித்துக்கு ஷொட்டு! - இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கருத்து...

சூர்யகுமாருக்கு குட்டு! ரோஹித்துக்கு ஷொட்டு! - இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கருத்து...

டி20 உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதி ஆட்டம் 9, 10ம் தேதிகளில் நடைபெற இருக்கும் வேளையில், 10ம் தேதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை பேட்டிங் வரிசை வலுவான நிலையில் உள்ளது. அதிலும் ரோகித் சர்மா தலையிலான இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அணியின் முக்கிய புள்ளியாக சூர்யகுமார் யாதவ் திகழ்ந்து வருகிறார். பெரும்பாலும் 3வது விக்கெட்டுக்கே ஜோடி சேர்ந்தாலும், 5 போட்டிகளில் 3 அரைசதங்களை எடுத்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தியதில் பெரும்பங்கு வகித்தார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணி ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, அரையிறுதிப்போட்டி என்பது அதில் இடம்பெற்றுள்ள அனைத்து அணிகளுக்குமே கடுமையான போட்டியாகத்தான் அமையும். ஏனெனில், பலம்வாய்ந்த அணிகளை வீழ்த்திதான் அரையிறுதிக்குள் நுழைந்திருக்கும். அதனால் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணி வெற்றிபெறும் என்று கூறியதோடு, சூர்யகுமார் யாதவ் குறித்து பேசும்போது,

suryakumar yadav
suryakumar yadav

அவர் ஒரு சிறந்த வீரர். தனது சிறப்பான அதிரடி பேட்டிங் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அவரை அவுட் ஆக்குவதில் எதிரணி பவுலர்கள் திணறி வருகிறார்கள். இருந்தாலும் இந்தியாவுக்கெதிரான அரையிறுதி ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ்-வை நாங்கள் அதிரடியாக விளையாட விடாமல் அவரை அடக்கிவிடுவோம் என்று கூறினார்.

rohit sharma
rohit sharma

அதன்பின் கூறிய பென்ஸ்டோக்ஸ், இந்திய அணி, ரோகித் சர்மாவின் தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அவரது தலைமையில் அனைத்து வீரர்களுக்கும் முழு சுதந்திரத்தையும் வழங்குகிறார். சில போட்டிகளில் அவர் சோபிக்கவில்லையென்றாலும், அவர் மிகவும் திறமைமிக்க விளையாட்டு வீரர். அவர் நிதானமாக யோசித்து செயல்பட்டு வருகிறார் என்றும், இனிவரும் ஆட்டத்தில் ரோகித் சர்மா தனது பேட்டிங் அதிர்வை வெளிப்படுத்துவார் என்றும் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com