ப்ளே ஆஃப் ரேஸில் ராஜஸ்தான் அணியை பின்னுக்குத் தள்ளி பெங்களூரு அணி முன்னேற்றம்!

ப்ளே ஆஃப் ரேஸில் ராஜஸ்தான் அணியை பின்னுக்குத் தள்ளி பெங்களூரு அணி முன்னேற்றம்!

நேற்றைய ஐபிஎல் போட்டியின் மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும், பெங்களூரு அணியும் மோதிய நிலையில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்று ப்ளே ஆஃப் ரேஸில் ராஜஸ்தான் அணியை பின்னுக்குத் தள்ளி முன்னேறி வருகிறது.

ஐபிஎல் போட்டி 16வது சீசன் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், பெங்களூரு அணியும் மோதின. டாஸை வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

துவக்க வீரர்களாக களமிறங்கிய ஃபாப் டூ ப்ளஸிஸ் பவர்பிளே ஓவரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, கோலி நிதானமான ஆட்டத்தை ஆடிவந்தார்.

இந்நிலையில், 7வது ஓவர் முடிவில், கோலி 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக, க்ளன் மேக்ஸ்வெல், டூ ப்ளஸிஸ் உடன் ஜோடி சேர்ந்தார். அதன்பின் இருவருமே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர்.

டூ ப்ளஸிஸ் 44 பந்துகளில் 55 ரன்களையும், மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 54 ரன்களையும் குவித்தனர். அதேபோல் அனுஜ் ரவத் 11 பந்துகளில் 29 ரன்களை எடுத்தார். இந்நிலையில், 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை குவித்தது.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

நேற்றைய போட்டி ராஜஸ்தான் அணிக்கு இவ்வளவு மோசமாக இருக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள், ராஜஸ்தான் அணி வீரர்களை திக்குமுக்காடச் செய்தனர்.

துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் இருவருமே 0 ரன்களில் அவுட்டாகினர். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 4 ரன்னிலும், ஜோ ரூட் 10 ரன்னிலும், படிக்கல் 4 ரன்னிலும் ஜூரேல் 1 ரன்னிலும் அவுட்டாக, ஹெட்மையர் மட்டும் 19 பந்துகளில் 35 ரன்களை எடுத்தார்.

அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களிலும், ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாகவே ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 59 ரன்களை மட்டுமே எடுத்து மிகமோசமான தோல்வியைத் தழுவியது.

இதையடுத்து, ப்ளே ஆஃப் சுற்றுக்கான ரேஸில் ராஜஸ்தான் அணியை கீழிறக்கி, பெங்களூரு அணி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com