துவங்கியது பார்டர்-கவாஸ்கர் டிராபி! 177 ரன்னில் முதல் இன்னிங்சில் சுருண்ட ஆஸ்திரேலியா!
உலகத் தர வரிசையிலும், ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப் பட்டியலிலும் டாப் ரெண்டு இடங்களில் உள்ள இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இவ்விரு அணிகளும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும்,
3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் விளையாட இருக்கி்ன்றன. மொத்தம் 102 டெஸ்ட்டுக்களில் மோதியுள்ள ஆஸ்திரேலியா 43, இந்தியா 30 என முன்னிலை வகிக்கிறது. (28 விளையாட்டுகள் டிரா; 1 டை) மொத்தம் 102 டெஸ்ட்டுகள்.
27 டெஸ்ட் தொடர்களில், ஆஸ்திரேலியா 12; இந்தியா 10 என வெல்ல, 5 தொடர்கள் சமமாக முடிந்தன. கடைசியாக விளையாடிய 5 டெஸ்டில் இந்தியாவுக்கு 4 வெற்றி;
1 தோல்வி. ஆஸ்திரேலிய அணிக்கு 4 வெற்றி; 1 டிரா என சூப்பராக இருக்கிறது.
ரோகித் தலைமையிலான இந்திய அணி, சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 25 தொடர்களில் படைத்துள்ள உலக சாதனையை மேலும் நீட்டிக்கும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.

பார்டர் – கவாஸ்கர் டிராபி 1996இல் ஆரம்பமானது. புகழ் பெற்ற இரு பிரபல கிரிக்கெட் வீரர்களான ஆலன் பார்டர் (ஆஸ்திரேலியா), சுனில் கவாஸ்கர் (இந்தியா) ஆகியோர்களின் பெயரில் இந்தக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் 65 இன்னிங்ஸில் 3262 ரன்களை வெற்றிகரமாக எடுத்து முன்னிலையில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர்.
இன்று தொடங்கியுள்ள பார்டர் – கவாஸ்கர் டிராபி சீரிஸின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரிலும், மற்றவைகள் டெல்லி, தரம்சாலா, அகமதாபாத் ஆகிய இடங்களிலும் நடைபெறவிருக்கின்றன.
இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில் வழியாக நடைபெறும் இந்த டூர், 2020 – 21க்குப் பிறகு இப்போது நடைபெறுகிறது. தற்சமயம் இந்தியாவிடம் இந்த டிராபி உள்ளது.
மேலும், இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில் US $ 1 மில்லியன் பரிசையும் டெஸ்ட் சாம்பியன் Mace (சூலாயுதம் போல்) ஐயும் டாப் ரேங்க் டெஸ்ட் உடைய தேசத்துக்கு வருடந்தோறும் ஏப்ரல் 1ஆந் தேதி அளித்து வருகிறது.
பார்டர் – கவாஸ்கரின் 3 ஒருநாள் போட்டிகள் மும்பை; விசாகப்பட்டினம் (வைசாக்) மற்றும் சென்னையில் நடைபெறவிருக்கின்றன.
8 டெஸ்ட் மேட்ச்களில் 47 விக்கெட்டுக்களை எடுத்துள்ள இந்திய வீரர் அக்சர் இன்னும் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி விட்டால், டெஸ்ட் போட்டிகளில் அதிவிரைவில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்கிற சாதனையை அஸ்வினுடன் ( 9 டெஸ்ட் = 50) பகிர்ந்துகொள்ளலாம்.

இன்று தொடங்கியுள்ள இந்த ஆட்டத்தின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வந்த நிலையில், 63.5 ஓவரில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும், கே.எல். ராகுலும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.