ப்ளே ஆஃப் சுற்றில் சென்னை அணி நுழைய வாய்ப்பு இருக்கா? இல்லையா?

ப்ளே ஆஃப் சுற்றில் சென்னை அணி நுழைய வாய்ப்பு இருக்கா? இல்லையா?

ஐபிஎல் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்துவருகிறது. இந்நிலையில், இன்றைய போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதுகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை - டெல்லி அணிகளுக்கிடையேயான இன்றைய போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை அணியைப் பொறுத்தவரை இதுவரை 11 போட்டிகளில் விளையாடி, 13 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் இருந்துவருகிறது. டெல்லி அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகளுடன் 10ம் இடத்தில் இருக்கிறது.

என்னதான் டெல்லி அணி 10ம் இடத்தில் இருந்தாலும், அந்த அணி கடைசி 5 போட்டிகளில் சிறப்பாக விளையாடி 4 போட்டிகளில் வெற்றிபெற்று 8 புள்ளிகளைப் பெற்றுளளது.

இதனால், இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கை ஓங்கும் பட்சத்தில், சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பும் பறிபோகலாம்.

அதுமட்டுமல்லாமல், இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றாலும், லக்னோ, மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளின் மீதமுள்ள போட்டிகளின் வெற்றிவாய்ப்பை பொறுத்துதான் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழையுமா? என்பதை தீர்மானிக்க முடியும்.

அதன்படி, மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீதமுள்ள 3 போட்டிகளிலும் ஜெயிக்கும் பட்சத்தில் மும்பை 18 புள்ளிகளுடனும், ராஜஸ்தான் 16 புள்ளிகளுடனும், 2 மற்றும் 3ம் இடத்திற்கு முன்னேறும்.

அதேபோல் லக்னோ அணி 2 போட்டிகளில் வெற்றிபெறும் பட்சத்தில் 15 புள்ளிகளும், சென்னை அணி 15 புள்ளிகளும் பெற்று 4ம் இடத்தில் இருக்கும்.

அதில், நெட் ரன் ரேட் விகிதப்படி இந்த இரு அணிகளில் ஒரு அணி 4ம் இடத்தைப் பெற வாய்ப்புள்ளது.

அதனால், இன்று நடைபெறும் போட்டியும், சென்னை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது. அதேபோல் அடுத்து வரும் போட்டிகளிலும் சென்னை அணி ஜெயிக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com