கனடா ஓபன் 2023 சாம்பியன் - லக்ஷ்யா சென்!

கனடா ஓபன் 2023 சாம்பியன் - லக்ஷ்யா சென்!

ந்த ஆண்டுக்கான கனடா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய பாட்மின்டன் வீரர் லக்ஷ்யா சென், சீனாவின் லீஃபெங்கை 21-18, 22-20 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றார்.

மூக்கில் அறுவைச்சிகிச்சை நடந்து ஓய்வுபெற்றிருந்த நிலையில் சர்வதேச பாட்மின்டன் போட்டியில் நீண்டகால காத்திருப்புக்கு பிறகு இந்த வெற்றி எனக்கு கிடைத்துள்ளது என்றார்.கடந்த ஆண்டு ஆகஸ்டில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற பிறகு லக்ஷ்யா சாம்பியானாகும் முதல் போட்டி இதுவாகும்..

வெற்றிக்குப் பிறகு பேசிய லக்ஷ்யா பாரீஸ் ஓலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும் கால கட்டம் தொடங்கியிருக்கும் நிலையில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காமல் கடினமாக இருந்தது. அத்தகைய தருணத்தில் இந்த வெற்றி எனது தன்னம்பிக்கைய ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

லீ எப்போதுமே கடினமான போட்டியாளராக இருப்பதால் அவருக்கு எதிரான ஆட்டம் சவால் மிகுந்ததாகவே இருக்கும். இருவரும் சமபலத்துடனேயே மோதினாலும் முக்கிய கட்டங்களில் புள்ளிகளை கைப்பற்றியதால் வெற்றி என் வசமானது என்றார்.பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இரு வீரர்களுமே பரஸ்பரம் ஆக்ரோஷமாக விளையாடினர். ஆட்டத்தில் சீன வீரர் லீ 390 கி.மீ. வேகத்தில் இரு ஸ்மாஷ்களை வீச பதிலுக்கு லக்ஷ்யா 400 கி.மீ. வேகத்தில் ஸ்மாஷ்களை வீசி பதிலடி கொடுத்தார்.

இப்போட்டியில் சாம்பியனான லக்ஷ்யாவுக்கு பட்டத்துடன் ரூ.26 லட்சம் ரொக்கப்பரிசும் 500 ரேங்கிங் புள்ளிகளும் கிடைத்தன.கனடா ஓபனைத் தொடர்ந்து அமெரிக்க ஓபன் பாட்மின்டன் போட்டியிலும் லக்ஷ்யா பங்கேற்கிறார். அவரோடு பி.வி.சிந்து, சாய் பிரனீத் உள்ளிட்டோரும் களம் காண்கின்றனர்.

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான லீ ஷி ஃபெங்கை இதுவரை 7 முறை சந்தித்த லக்ஷ்யா தற்போது ஐந்தாவது முறையாக வென்றிருக்கிறார்.மேலும் உலக பாட்மின்டன் சம்மேளன போட்டிகளில் இரண்டாவது முறையாக பட்டத்தை கைப்பற்றியிருக்கிறார். கடந்த ஆண்டு இந்திய ஓபன் பாட்மின்டன் போட்டியில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.நடப்பு ஆண்டில் சர்வதேச பாட்மின்டன் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற இரண்டாவது வீரர் லக்ஷ்யா ஆவார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com