சிக்கலில் தவிக்கும் சிஎஸ்கே! பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சிக்கலில் தவிக்கும் சிஎஸ்கே! பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணி, லக்னோ அணி மோதிய நிலையில், மழை குறுக்கிட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்ட நிலையில், சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் 16வது சீசன் தொடரின் 45வது போட்டியில் சென்னை அணியும் லக்னோ அணியும் மோதின. இதில் முதலில் லக்னோ அணி பேட்டிங் செய்த நிலையில், 19.2 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, தற்போதை புள்ளிப்பட்டியல் படி, குஜராத் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், லக்னோ அணி 11 புள்ளிகளுடன 2வது இடத்திலும், சென்னை அணி 11 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், ராஜஸ்தான் அணி, பெங்களூர் அணி, மும்பை அணி, பஞ்சாப அணி 10 புள்ளிகளுடன் 4, 5, 6, 7 வது இடங்களை தக்கவைத்துள்ளன.

இதில் சென்னை அணி 3வது இடத்தில் இருந்தாலும், கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், லக்னோ அணியும், சென்னை அணியும் 10 போட்டிகளில் விளையாடி உள்ளன. ஒருவேளை நேற்றைய போட்டியில் சென்னை அணி விளையாடி வெற்றி பெற்றிருந்தால் 2 புள்ளிகள் பெற்று 12 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் இருந்திருக்கும்.

ஆனால் போட்டி ரத்தாகி, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்ட நிலையில், சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையுமா என்பது சற்று கவலையளிக்கும் விஷயமாகத்தான் உள்ளது.

ஏனென்றால் ராஜஸ்தான், பெங்களூர், மும்பை அணிகள் இதுவரை 9 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளன. அந்தவகையில் இந்த மூன்று அணிகளும் அடுத்த ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே, 12 புள்ளிகளுடன் முன்னேறிவிடும். சென்னை அணி வெளியேறும் வாய்ப்பும் அதிகரித்துவிடும்.

அதனால், மீதமிருக்கும் 4 போட்டிகளிலும் சென்னை அணி வென்றால் மட்டுமே, அடுத்த கட்டத்திற்கு செல்லும் வாய்ப்பைப் பெறும்.

சென்னை அணி மீதமுள்ள 4 போட்டிகளில் மும்பை மற்றும் கொல்கத்தா அணியுடன் ஒரு போட்டியிலும், டெல்லி அணியுடன் 2 போட்டியிலும் மோதவுள்ளது. இதில் 3 போட்டிகள் சென்னையிலும், டெல்லியுடனான ஒரு போட்டி டெல்லியிலும் வைத்து நடைபெறஉள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com