தோனியின் சேட்டையால் தெறித்து ஓடிய தீபக் சாஹர்! வைரல் வீடியோ!
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது தோனி செய்த சேட்டை வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், பெங்களூரு அணிக்கும் இடையே நடந்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் சிஎஸ்கே அணி த்ரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவரில் 226 ரன்களை எடுத்தது. இந்த போட்டியில் துவக்க வீரர்கள் சிறப்பாக ஆடி வந்ததால், தோனிக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அவர் கடைசி ஓவரில், ஒரு பந்தை மட்டுமே எதிர்கொண்டார்.
பொதுவாக எம்.எஸ். தோனி கடைசி நேரத்தில், இக்கட்டான சூழ்நிலையில் அடித்து ஆடும் நோக்கத்தில்தான் களமிறங்குவார். அந்தவகையில், களத்திற்கு வரும் முன்னர் சிறிது warm up செய்வது வழக்கம். அப்படி தோனி ரிலாக்ஸாக பந்தை சிக்ஸருககு அடிப்பதுபோல் பேட்டை தூக்கிஅடிக்க, அருகே தீபக் சாஹர் அமர்ந்திருக்க, அவரது முகம் அருகே பேட் வரவே, பயந்துபோய் அநத் இடத்தை விட்டு உடனே எழுந்துவிடுகிறார். ஆனால் தோனி இதை கண்டுகொள்ளாததுபோல் இருப்பார்.
தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்க்கும்போது, ஒருவிதமான நகைச்சுவை உணர்வுதான் ஏற்படுகிறது. இதோ அந்த வீடியோ...