விராட் கோலி -  நூருல் ஹசன்
விராட் கோலி - நூருல் ஹசன்

'ஃபேக் ஃபீல்டிங்’ செய்தாரா விராட் கோலி? நூருல் ஹசன் புகார்!

விராட் கோலி ‘ஃபேக் ஃபீல்டிங்’ செய்தார் என்று வந்தேச அணி இந்தியாவின் வெற்றி பற்றி புகார் தெரிவித்துள்ளது சர்ச்சையாகி வருகிறது.

T 20 உலக கோப்பை தொடருக்கான சூப்பர் 12 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தியா மற்றும் வங்க தேச அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் புதன் கிழமை நவம்பர் 2 ஆம் தேதியன்று அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற வங்க தேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 185 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்த வங்க தேசம் களமிறங்கியது. தொடக்க வீரர் லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அந்த அணி விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்த நிலையில், மைதானத்தில் மழை பெய்ய தொடங்க , போட்டி மழையின் காரணமாக பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்க தேச அணி வெற்றி பெற 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுக்கவேண்டும் என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வங்க தேச அணியின் வெற்றிக்கு 54 பந்துகளில் 85 ரன்கள் எடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

இதில் இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சின் காரணமாக , அதில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில், அர்ஷ்தீப் சிங் ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்திருந்தது. இந்த போட்டியில் விராட் கோலி ‘ஃபேக் ஃபீல்டிங்’ செய்தார் என்று வந்தேச அணியின் நூருல் ஹசன் இந்தியாவின் வெற்றி பற்றி புகார் தெரிவித்துள்ளார்.

நூருல் ஹசன் குறிப்பிடும் சம்பவம் 7வது ஓவரில் நடந்தது. அப்போது லிட்டன் தாஸ் அக்சர் பட்டேலின் டீப்-ஆஃப்-சைட் மைதானத்தை நோக்கி பந்தை விளையாடினார். அர்ஷ்தீப் சிங் த்ரோவை அனுப்பியபோது, ​​பாயிண்டில் நின்ற கோஹ்லி பந்து அவரைத் தாண்டிச் செல்லும்போது ஸ்டம்பிக்கு பிடித்து வீசுவது போல நடித்தார். அந்த நேரத்தில், கள நடுவர்களான மரைஸ் எராஸ்மஸ் மற்றும் கிறிஸ் பிரவுன் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவில்லை. மறுமுனையில் இருந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் அதை சுட்டிக்காட்டாததால் களத்தில் இது கவனிக்கப்படாமல் போனது.

ஐசிசியின் 41.5 விதியின்படி, நியாயமற்ற ஆட்டம், வேண்டுமென்றே கவனச்சிதறல், ஏமாற்றுதல் அல்லது ,விளையாட்டில் இடையூறு ஆகியவற்றைத் தடைசெய்கிறது. மேலும்

விளையாட்டில் விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கருதப்பட்டால், அந்த குறிப்பிட்ட பந்து வீச்சை டெட் பால் என நடுவர் அறிவிக்கலாம். பேட்டிங் அணிக்கு ஐந்து ரன்கள் வழங்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக வங்க தேச விக்கெட் கீப்பர் வீரர் நூருல் ஹசன் கூறுகையில் இந்த போட்டியில் ஃபேக் ஃபீல்டிங் இருந்தது இதனை நடுவர் எப்படி புறக்கணித்தார் என்று தெரியவில்லை. ஐந்து ரன்கள் பெனால்டியாக இருந்திருக்கலாம் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com