டொரோன்டோ மாஸ்டர்ஸ் போட்டி: ஜோகோவிச் விலகல்

ஜோகோவிச்
ஜோகோவிச்

லகின் நெம்பர் 2 டென்னிஸ் ஆட்டக்காரரான நோவக் ஜோகோவிச், ஏ.டி.பி. டொரோன்டோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகிவிட்டதாக ஸ்பெயின்க் டென்னிஸ் கனடா தெரிவித்துள்ளது.

23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செர்பியாவின் நோவா ஜோகோவிச் சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீர்ரான கார்லோஸ் அல்கராஸிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்த ஒருவாரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உடல் சோர்வு காரணமாக ஜோகோவிச் டொரோன்டோ போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்க இருக்கும் யு.எஸ்.ஓபன் டென்னிஸ் போட்டிக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளவே டொரோன்டோ போட்டியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் தங்கி போட்டிகளில் பங்கேற்பதில்  எனக்கு எப்போதும் மகிழ்ச்சிதான். ஆனால், நண்பர்களுடன் கலந்து ஆலோசித்தபோது டொரோன்டோ போட்டியிலிருந்து நான் விலகிக் கொண்டது சரியான முடிவுதான் என்று ஜோகோவிச் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாக டென்னிஸ் கனடா அகடமி தெரிவித்துள்ளது.

மேலும் அவரின் அறிக்கையில், டொரோன்டோ மாஸ்டர்ஸ் கோப்பை போட்டியை நடத்தும் இயக்குநர் கார்ல் ஹாலே எனது முடிவை புரிந்து கொண்டதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் ஆண்டுகளில் நடைபெறும் போட்டிகளில் நான் பங்கேற்பேன் என்று நினைக்கிறேன் என்று ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.இதையடுத்து விம்பிள்டன் போட்டியில் காலிறுதிக்கு தகுதிபெற்ற கிறிஸ்டோபர், டொரோன்டோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com