
இந்திய மண்ணில், கிரிக்கெட் குழுவில் உயர் தர கிரிக்கெட் (First class Domestic Cricket) ஆடிய இந்த புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் இந்திய அணிக்கு எதிராக கிரிக்கெட் டெஸ்ட் விளையாடியது இல்லை.
இங்கிலாந்து கிரிக்கெட் டீமிற்காக 78 டெஸ்டுகள் விளையாடி 17 சதங்கள் மற்றும் மொத்தம் 5807 ரன்கள் சேர்த்தவர். அதிக பட்சமான ரன்கள் 278.
கிரிக்கெட்டை தவிர கால்பந்து விளையாட்டு வீரர். கால்பந்து ஆட்டத்தில் முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் மிகவும் அவதிப்பட்ட நிலையிலும் விடாமல் டெஸ்ட் மேட்சுகளில் பங்கு பெற்று சாதித்தவர். அவர் தான் டென்னிஸ் காம்ப்டன் (Denis Compton).
இவர் டான் பிராட்மேனுக்கு எதிராக டெஸ்ட் மேட்சுகள் விளையாடியவர்.
இரண்டாம் உலக யுத்தத்தில் பங்கு பெற்றவரான இவர், இந்திய மண்ணில் ராணுவத்தில் சார்ஜன்ட் - மேஜர் (Sargent - Major) பதவி வகித்து பணிபுரிந்தார்.
இந்திய முதல் தர கிரிக்கெட் மேட்ச்களில் விளையாடியவர், ரஞ்சி கோப்பை பந்தயம் உட்பட. ஏழு சதங்களை எடுத்தார். இந்திய வீரர் முஷ்டாக் அலியுடன் ஜோடி சேர்ந்து ஆடி அசத்தினார். அதிக பட்ச ரன்கள் எடுத்தது 249.
குதிரைப் பந்தியங்களில் பங்கு பெறுவதில் விருப்பம் கொண்டவர். அந்த காலத்திலேயே ப்ரீல்கிரீம் (Brylcreem), சிகரெட்டுகள் விளம்பரங்களில் ஈடுபட்டவர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கீத் மில்லரும் இவரும் நெருங்கிய நண்பர்கள். புகழ்பெற்ற ஆஷஸ் தொடரின் ஆட்டநாயகருக்கு அளிக்கப்படும் பதக்கத்திற்கு 'காம்ப்டன் - மில்லர் மெடல்' என்று அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
பிற்காலத்தில், கிரிக்கெட் பற்றிய எழுத்தாளராகவும், பிபிசி டெலிவிஷனுக்கு வர்ணனையாளரகவும் பணிபுரிந்த இவர் தனது 78 ஆவது வயதில் 1997 ஆம் வருடம் இயற்கை எய்தினார்.