பவுலிங் போட்டு முதல் டெஸ்ட் மேட்சை துவக்கிய மிகச்சிறந்த பேட்ஸ்மேன் யார் தெரியுமா?

பவுலிங் போட்டு முதல் டெஸ்ட் மேட்சை துவக்கிய மிகச்சிறந்த பேட்ஸ்மேன் யார் தெரியுமா?

கிரிக்கெட் துணுக்குகள்

இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட்  கேப்டன் ஆக இருந்த மைக் ப்ரெயிரலி (Mike Brearly) சரளமாக குஜராத்தி மொழி பேசுவார். இவரது மனைவி குஜராத்தை சேர்ந்தவர்.

அன்றைய மதராஸ் (இன்றைய தமிழ்நாடு) அணியை சார்ந்த மூன்று ஆட்டக்காரர்கள் சேர்ந்து இதுவரையில் ஒரே ஒரு டெஸ்ட் மேட்ச் தான் ஆடியுள்ளனர். 1961, பம்பாய் (இன்றைய மும்பை) இங்கிலாந்து அணிக்கு எதிராக. ஏ ஜி கிருபால் சிங் , ஏ ஜி மில்கா சிங், வி வி குமார். 

sunil gavaskar
sunil gavaskar

புகழ் பெற்ற ஓப்பனிங் பேட்ஸ்மன் சுனில் கவாஸ்கர், தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தை பவுலிங் போட்டுத்தான் துவங்கினார். மேற்கு இந்திய குழு முதலில் பேட்டிங் ஆடியதால். 

சவுரவ் கங்குலி (Sourav Ganguly) தனது துவக்க (முதல் டெஸ்டில்) சதம் எடுத்தார் (131ரன்). கடைசி டெஸ்டில், கடைசி இன்னிங்சில் ரன் எதுவும் (0) எடுக்கவில்லை.

jason gillespie
jason gillespie

நைட் வாட்சமேனாக களம் இறங்கி இரட்டை சதம் எடுத்து சாதனை புரிந்தார் இந்த வேகப்பந்து வீச்சாளர்.  வங்க தேசத்துக்கு எதிரான ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் கில்லெஸ்பி (Jason Gillespie).

இவர் பெரும்பாலான ஆட்டங்களில் இரட்டை இலக்கு ரன்களைக் கூட குவித்தது இல்லை..!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com