திரவுபதி முர்மு
திரவுபதி முர்மு

ஜெர்லின் அனிகா , பிரக்ஞானந்தா உள்ளிட்டோருக்கு அர்ஜுனா விருது வழங்கினார் திரவுபதி முர்மு!

இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன் , மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா உள்ளிட்ட 25 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

பிரக்ஞானந்தா
பிரக்ஞானந்தா

திரவுபதி முர்மு தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா உள்ளிட்ட 25 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியார் விருது ஜீவன் ஜோத் சிங், முகமது அலி, சுமா சித்தார்த், சுஜித் மான் ஆகியோருக்கு திரவுபதி முர்மு வழங்கினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com