2-வது ஒருநாள் போட்டியில் ரோகித், கோலிக்கு ஓய்வு கொடுத்தது ஏன்? ராகுல் டிராவிட் விளக்கம்

ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவம் வாய்ந்த ஆட்டக்காரர் விராட் கோலி இருவருக்கும் ஓய்வுகொடுத்தது ஏன் என்று அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை பார்படாஸில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் இடம்பெறவில்லை. ஆனால், இந்த முடிவு எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. அந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இதனிடையே மூன்றாவது இறுதி ஒரு நாள் போட்டி தரோபாவில் நடைபெற உள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித், விராட் கோலி இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டதை நியாயப்படுத்தியுள்ளார் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். இந்த ஆண்டு இறுதியில் ஆசிய கோப்பை மற்றும் ஐ.சி.சி. ஆடவர் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் சஞ்சு சோமன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் போன்றவர்களின் ஆட்டத் திறமையை மதிப்பிடவே ரோகித் சர்மா, கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

நமது வீர்ர்களின் திறமையை மதிப்பிட இதுவே கடைசி வாய்ப்பாக இருந்ததால் இந்த முடிவை மேற்கொண்டதாகவும் டிராவிட் குறிப்பிட்டார். நம்மிடம் இருக்கும் வீர்ர்களில் சிலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் ஆசிய போட்டி மற்றும் உலக கோப்பை போட்டிக்குள் உடல் தகுதி பெறுவார்கள் என்று நம்புகிறேன். இருந்தாலும் அவர்களை முற்றிலுமாக நம்பியிருக்க முடியாது.

எனவே வேறு சிலரையும் நாம் தயார்படுத்தியாக வேண்டும். அவர்களின் திறமையை சோதிக்க இதுதான் சரியான நேரம். இது அவர்கள் ஆட்டத்தை மதிப்பிட நமக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பாகும் என்றார் டிராவிட்.

இஷாந்த் கிஷன் இந்த போட்டியில் அரை சதம் எடுத்துள்ளார். சாம்ஸன் (9) மற்றும் சூரியகுமார் யாதவ் (24) இருவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. சுபம் கில் மற்றும இஷாந்த் கிஷன் இருவரும் ஆட்டத்தை நன்றாகவே தொடங்கிய போதிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்து நாம் 181 ரன்களில் வீழ்ந்துவிட்டோம். குறைந்தபட்சம் நாம் 230 அல்லது 240 ரன்களாவது எடுத்திருக்க வேண்டும் என்றார் டிராவிட்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com