கத்தியின்றி, ரத்தமின்றி வசனத்திற்கேற்ப... சத்தமின்றி... விக்கெட் இழப்பின்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து!

alex hales, jos buttler
alex hales, jos buttler

பெரிய எதிர்பார்ப்புக்கிடையே அடிலெய்டில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. டாஸை வென்ற இங்கிலாந்து அணி பௌலிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுலும், ரோகித் சர்மாவும் களத்தில் இறங்கினர்.

இந்த போட்டியிலும் இரு வீரர்களும் பெரிதாக சோபிக்கவில்லை. கே.எல். ராகுல் 5 ரன்களுடனும், ரோகித் சர்மா 27 ரன்களுடனும் நடையைக் கட்டினர். இந்த தொடரில் அதிரடியாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவும் 14 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலியும், ஹார்திக் பாண்டியாவும் மட்டும சற்று பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.

169 ரன்கள் எடுத்தால் வெற்றியுடன் இறுதிப் போட்டிக்குள் நுழையலாம் என்ற முனைப்புடன் களத்தில் இறங்கியது இங்கிலாந்து அணி.

தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ஜாஸ் பட்லரும், அலெக்ஸ் ஹேல்ஸ்-ம் ஆரம்பம் முதலே அமர்க்களப்படுத்தி ஆடினர். இந்திய பௌலர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. அக்சர் படேல், அர்ஷ்தீப்சிங்-கைத் தவிர அனைத்து பவுலர்களின் பந்துகளையும் துவம்சம் செய்தனர்.

அதிரடியாக விளையாடி, ஜாஸ் பட்லர் 49 பந்துகளில், 9 ஃபோர், 3 சிக்ஸ் உடன் 80 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் 4 ஃபோர், 7 சிக்ஸ் உடன் 86 ரன்களும் எடுத்த நிலையில், வேறு யாருக்கும் வாய்ப்பே கொடுக்காமல் இருவருமே அடித்து விளையாடி 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ஆட்டத்தை சுமூகமாக முடித்து வைத்தனர்.

இந்நிலையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்நிலையில், வருகின்ற 13ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com