இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டிகள்: அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.!

இங்கிலாந்து - இந்தியா  டெஸ்ட் போட்டிகள்:
அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.!

ந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரியில் இங்கிலாந்தை எதிர்கொள்வதற்கு முன்னதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் மூன்றாவது சுழற்சியில் இதற்கான பிரசாரத்தை இந்தியா மேற்கொள்ளும். இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது.

தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஹதராபாதில் வரும் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கி விசாகப்பட்டினத்தில் நடைபெறும். மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் பிப்ரவரி 15 இல் நடைபெறும். நான்காவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி தொடங்கி ராஞ்சியில் நடைபெறும். தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் மார்ச் மாதம் 7 ஆம் தேதி தொடங்கி நடைபெறும்.

கடைசியாக இங்கிலாந்து இந்தியா வந்தபோது இரு அணிகளும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடின. இதில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. சென்னையிலும் ஆமதாபாதிலும் போட்டிகள் நடைபெற்றன. இரண்டு மைதானங்களிலும் தலா இரண்டு போட்டிகள் நடைபெற்றன.

சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. டொமினிகாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வென்றது. போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா சிறப்பாக விளையாடிய போதிலும் மழையால் கடைசிநாள் ஆட்டம் நின்றது. இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டியில் இந்தியா சந்தித்தது. இதில் ஆஸ்திரேலியா இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியாவுக்கு இது இரண்டாவது தோல்வியாகும். முன்னதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றிலும் இந்தியா, நியூஸிலாந்திடம் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com