மளமளவென சரிந்த விக்கெட்டுகள்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மளமளவென சரிந்த விக்கெட்டுகள்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தற்போது நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் டிராபி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும 3வது டெஸ்ட் போட்டி இன்று இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என அறிந்து டாஸை வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்ய முடிவெடுத்தார்.

அதன்படி, துவக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் அதிரடியை வெளிப்படுத்த எண்ணி களத்தில் இறங்கினர். எதிர்பார்த்ததுபோல் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்தை இருவரும் அடித்து ஆட ஆரம்பித்தனர்.

ஆனால் பந்து சுழற்பந்து வீச்சாளர்களின் வசம் மாறியதும், ஆட்டமும் தலைகீழாக மாறியது. பந்தின் பவுன்ஸ் தன்மை எதிர்பார்த்த அளவைவிட மிகவும் குறைவாக இருந்தது மட்டுமில்லாமல், சில பந்துகள், பேட்ஸ்மேன்களின் கணுக்கால் அளவு தான் பவுன்ஸ் ஆனது. அதிலும் சில பந்துகள் நன்றாக திரும்பியதால், இந்திய அணியில் விக்கெட்டுகள் மளமளவென சரிய ஆரம்பித்தது.

ஆட்டத்தின் 6வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் மாத்தீவ் குஹ்னிமான் வீசிய நிலையில், முதல் விக்கெட்டாக ரோஹித் சர்மா ஸ்டெம்பிங் முறையில் அவுட்டாக, மறுபடியும் 8வது ஓவரை மாத்தீவ் குஹ்னிமான் வீச சுப்மன் கில் ஸ்டீவ் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக, அடுத்து ஓவரை சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் வீச, பந்து நன்றாக ஸ்விங் ஆகி புஜாரா போல்ட் ஆனார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் எல்லாமே சுழற்பந்து வீச்சாளர்களின் பவுலிங்கில் வரிசையாக சுருண்டு விழ ஆரம்பித்த நிலையில், இந்தியா 10 விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி சார்பாக மாத்தீவ் குஹ்னிமான் 5 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 3 விக்கெட்டுகளையும், டாட் மர்பி 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து, தற்போது ஆஸ்திரேலியா தனது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com