பெடரேஷன் கோப்பை: 100 மீ மகளிர் தடைதாண்டுதலில் ஜோதி முதலிடம்!

பெடரேஷன் கோப்பை: 100 மீ மகளிர் தடைதாண்டுதலில் ஜோதி முதலிடம்!

ராஞ்சியில் வீர்சா முண்டா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 26-வது தேசிய பெடரேஷன் கோப்பை அதெலடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 100 மீ. தடை தாண்டும் போட்டியில் ஜோதி யர்ராஜி சாதனை படைத்துள்ளார். பந்தய தூரத்தை அவர் 12.89 விநாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்துள்ளார்.

போட்டி நிறைவுபெறுவதற்கு முதல்நாளான புதன்கிழமை நடைபெற்ற தடகள இறுதிப் போட்டியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது வீராங்கனை ஜோதி யர்ராஜி பந்தைய தூரத்தை 12.89 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

இந்த போட்டியில் முதலிடத்தை பெற்றதன் மூலம் வரும் ஜூலை மாதம் பாங்காக்கில் நடைபெறும் ஆசிய போட்டியில் பங்குபெறும் தகுதியைப் பெற்றுள்ளார். ஆசியப் போட்டிக்கான தகுதி 13.63 விநாடிகளாகும்.

100 மீ. தடகளப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நித்தியா ராமராஜ் இரண்டாவது இடத்தையும், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சப்னா குமாரி மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

என்னால் இந்த போட்டியில் ஜெயிக்க முடியாது என நினைத்தேன். ஏனெனில் 100 மீ. தடகளப் போட்டிக்கான பயிற்சிகளில் வேகமாக ஓடும் போது நான் தடுமாறினேன். ஆனால், இறுதிப்போட்டியில் எந்த பிரச்னையும் இல்லாமல் ஓடி, தடை தாண்டி

முதலிடத்தை பிடித்தேன் என்று மகிழ்ச்சியுடன் தெரித்தார் ஜோதி. ரிலையன்ஸ் பவுண்டேஷன் சார்பில் பிரிட்டனின் ஜேம்ஸ் ஹில்லியர் என்பவரிடம் அவர் பயிற்சி பெற்று வருகிறார்.

110 மீ. ஆடவர் தடைதாண்டுதலில் மகாராஷ்டிர மாநில்த்தின் தேஜஸ் அசோக் முதலிடத்தில் வந்தார். 13.61 விநாடிகளில் அவர் பந்தய தூரத்தை கடந்தார்.

இதனிடையே மகளிர் வட்டு எறிதல் போட்டியில் ஷாலினி செளதுரி முதலிடம் வென்றார். எனினும் இவர் கமல்ப்ரீத் கவுரின் சாதனையை முறியடிக்கவில்லை. கடந்த ஆண்டு நடந்த ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதை அடுத்து கமல்ப்ரீத் 3 ஆண்டுகள் போட்டியில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com