உலகக் கோப்பை கால்பந்து போட்டி: கத்தாரில் கோலாகலம்!

கத்தார்
கத்தார்

 உலகக் கோப்பை கால்பந்து போட்டி வளைகுடா நாடான கத்தாரில் இந்த மாதம் 20-ம் தேதி துவங்கப் படவுள்ளது. இதற்காக அந்நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது.

சர்வதேச 22-வது கால்பந்துப் போட்டி முதன்முறையாக அரபு நாட்டில் நடக்கவுள்ள நிலையில், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஏராளாமான வசதிகளை கத்தார் நாடு ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டின் தலைநகர் தோகாவைச் சுற்றி எட்டு கால்பந்து மைதானங்கள் இந்த கால்பந்து திருவிழாவுக்காக தயார்படுத்தப் பட்டுள்ளன. புத்தம்புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த ஸ்டேடியங்கள் நட்சத்திர விடுதிகளை மிஞ்சும் அளவுக்கு பிரமிப்பாகவும் வசதிகள் கொண்டதாகவும் உள்ளது.

மொத்தம் 32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இந்தப் கால்பந்துப் போட்டித் தொடர் மொத்தம் 29 நாட்கள் நடைபெறும் என்று சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த போட்டிகள் 8 பிரிவுகளில் தலா நான்கு அணிகள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 48 லீக் போட்டிகள் நடைபெற இருக்கிறது.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைத் தட்டிச் செல்லும் அணிகள் நாக்-அவுட் போட்டிகளுக்கு தகுதி பெற்று விடும். மொத்தம் 64 போட்டிகளை கொண்ட இந்த போட்டித் தொடரில், பைனல்ஸ் போட்டியானது டிசம்பர் 18-ம் தேதி நடைபெறுகிறது.

அரபு நாட்டில் நடத்தப்படும் முதல் போட்டி என்பதால், உலகம் முழுவதிலும் இருந்து கால்பந்து ரசிகர்கள் கத்தார் நாட்டுக்கு வந்து குவியத் தொடங்கியுள்ளனர். விடுதிகள் அனைத்தும் புக் ஆகி விட்டன.

இந்நிலையில், பல ரசிகர்கள் ஆற்றங்கரையில் கூடாரம் அமைத்து தங்கத் தொடங்கியுள்ளனர். மேலும் நிலைமையை சமாளிக்க அந்நாட்டு அரசு தற்காலிக விடுதிகள் கட்டி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தங்கச் செய்து நிலைமையை சமாளித்து வருகிறது.

மேலும் சொகுசு கப்பலில்  தங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் துவங்கியுள்ளது.தோகா முழுவதும் கால்பந்து ஜுரம் தொற்றிக்கொள்ளும் அளவுக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com