கபில் தேவ், ஜடேஜா
கபில் தேவ், ஜடேஜா

“பணம் வந்தால் வீரர்களுக்கு திமிர் வந்துவிடுகிறது” கபில்தேவ் கருத்துக்கு ஜடேஜா பதிலடி!

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீர்ர் கபில்தேவ், சர்வதேச போட்டிகளில் இந்திய அணியின் மோசமான செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்தியா தோல்வி கண்டது. இந்த நிலையில் கபில்தேவ், இந்திய அணியை கடுமையாக விமர்சித்துள்ளது வைரலாகி உள்ளது.

1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது இந்திய அணியில் கேப்டனாக இருந்தவர் கபில்தேவ். “இப்போதெல்லாம் ஐபிஎல் போட்டிகள் மூலம் நிறைய பணம் வருவதால் இந்திய அணி வீர்ர்களுக்கு திமிரும்கூட வந்துவிட்டது” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இளம் வீர்ர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களின் திறமையை சோதிப்பதற்காக அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஒய்வு கொடுத்தார். உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் இளைஞர்களை தயார்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டு சூரியகுமார் யாதவ் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு தரப்பட்டது.

ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்தனர். புதியவர்களை சோதித்து பார்க்க இது தருணமல்ல என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்த முன்னாள் கேப்டன் கபில் தேவ், “சில சமயங்களில் பணம் அதிகம் வந்துவிட்டால், கூடவே திமிரும் வந்துவிடுகிறது. இந்திய அணி வீர்ர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் போல் செயல்படுகின்றனர்” என்று கூறியிருந்தார்.எனினும் கபில்தேவின் கருத்துக்கு ரவீந்திர ஜடேஜா பதிலடி கொடுத்துள்ளார். இந்திய அணி வீர்ர்களிடம் திமிர் இல்லை. கபில்தேவ் இதை எங்கே எதைவைத்து சொன்னார் என்பது தெரியவில்லை.

ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமை இருக்கிறது. அதன்படி முன்னாள் கேப்டன் கபில்தேவ் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ஆனால், இந்திய அணியில் எவருக்கும் கர்வம் இல்லை என்று குறிப்பிட்டார்.

அனைத்து வீர்ர்களும் அணியின் வெற்றிகாகவே செயல்படுகின்றனர். இதில் தனிப்பட்ட கருத்து ஏதும் இல்லை. ஒவ்வொருவரும் கிரிக்கெட்டை ரசிக்கிறார்கள். கடுமையாக உழைக்கிறார்கள். எதையும் யாரும் தங்கள் உரிமையாக எடுத்துக் கொள்வதில்லை. எல்லோரும் 100 சதவீதம் ஒத்துழைப்பு தருகின்றனர்.

சில நேரங்களில் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்போது இதுபோன்ற விமர்சனங்கள் வரத்தான் செய்யும். இப்போது இருக்கும் அணி நல்ல அணி. இந்தியாவையே நாங்கள் பிரதிநித்துவ படுத்துகிறோமே தவிர எங்களுக்கு என்று தனிப்பட்ட கருத்தோ கொள்கையோ கிடையாது என்றார். 

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com