ரொனால்டோவின் அல்-நாஸர் கால்பந்து அணியில் சேர்ந்தார் சாடியோ மானே

சாடியோ மானே
சாடியோ மானே

பேயர்ன் மூனிச் செனகல் முன்கள கால்பந்து வீர்ர் சாடியோ மானே அல்-நாஸர் அணியில் சேர்ந்துவிட்டதாக சவூதி ப்ரோ லீக் கிளப் தெரிவித்தது. எனினும் அவருக்கு என்ன தொகை பேசப்பட்டது என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. எனினும் சவூதி கிளப், 31 வயதான சாடியோவுக்கு 40 மில்லியன் யூரோக்கள் வழங்கியதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. பேயர்ன் அணி ஒப்பந்தம் முடிவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

31 வயதான சாடியோ மானே, கால்பந்து வரலாற்றில் முக்கிய இடம்பிடித்துள்ள ஆப்பிரிக்க வீர்ர் ஆவார். 2016 ஆம் ஆண்டு லிவர்பூல் ப்ரீமியர் லீக் கிளப்பில் அவர் சேர்ந்தபோது அவரது கால்பந்து வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. பரிமாற்ற கட்டணமாக அந்த நேரத்தில் அவருக்கு 34 மில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டன. இது அவருக்கு கொடுக்கப்பட்ட அதிக தொகையாகும். லிவர்பூல் அணியில் சாடியோ மானே, சக வீர்ர்கள் முகமது சலா மற்றும் ராபர் பிர்மினோவுடன் இணைந்து தாக்குதல் ஆட்டத்தை நடத்தி ரசிகர்களை பிரமிக்கவைத்தார்.

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இந்த மூவர் கூட்டணி பல போட்டிகளில் சிறப்பாக ஆடி சாம்பியன்ஷிப் பட்டம் பெற உதவினர். 2019-20 இல் ப்ரீமியர் லீக் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் சாடியோ மானே. 2021 இல் அவர் ப்ரீமியர் லீக் போட்டியில் தனது 100-வது கோலை போட்டார். 100 கோல் போட்ட மூன்றாவது ஆப்பிரிக்கர் என்ற பெருமையும் அவருக்கு  கிடைத்தது. லிவர்பூல் அணிக்காக அவர் விளையாடியபோது சர்வதேச அளவில் புகழ்பெற்றார். 2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பாலன் டீ ஓர் சிறப்பு ஆட்டங்களில் முறையே நான்காவது மற்றும் இரண்டாவது இடத்தை லிவர்பூல் அணி பெற்றது.

2022 ஆம் ஆண்டில் சாடியோ மானே பேயர்ன் மூனிச் அணியுடன் தனது புதிய பயணத்தை தொடங்கினார். கோடைக்கால விளையாட்டில் பேரம் நடந்து 35 மில்லியின் யூரோக்களுக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். விளையாட்டின்போது ஏற்பட்ட காயம் காரணமாக மூன்று மாதங்கள் ஓய்விலிருந்த மானே, 2023 பிப்ரவரியில் மீண்டும் விளையாட வந்தார்.

\எனினும் பேயர்ன் அணியில் அவரது ஒப்பந்த காலத்தில் சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. சக அணி வீர்ர் லெராய் சானேவுடன் மோதலில் ஈடுபட்டதாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ஆட்டத்திலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுபோன்ற சவால்கள் இருந்தபோதிலும் போரூஸியா டோர்முண்ட் இரண்டு புள்ளிகளை விட்டுக் கொடுத்த நிலையில் பண்டேஸ்லிகா அணியை பேயர்ன் வெல்ல மானே முக்கிய காரணமாக இருந்தார்.

சவூதி ப்ரோ லீக் அணியான அல்-நாஸருக்கு மானே சென்றதால் பேயர்ன் மூனிச் அணியில் அவரது காலம் மிக்க் குறைவானதாகவே இருந்தது. அல்-நாஸர் அணியில் சேர்ந்ததன் மூலம் சாடியோ மானே புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். அவரது வேகமான ஓட்டம், தொழில் திறமை மற்றும் கோல் அடிக்கும் திறன் ஆகியவை அவருக்கு நல்லதொரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. புதிய பயணத்தை தொடங்க இருக்கும் அவரை கால்பந்து ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பார்கள். அல்-நாஸர் அணியில் அவர் தனது முத்திரையை எப்படி பதிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com