
ஹனுமந்த் சிங்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஒருமுறை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பொழுது உடல் நலம் சரியில்லாததால் ஒரு ஆட்டக்காரர் மைதானத்தில் விளையாட முடியவில்லை. இங்கிலாந்து அணிக்காக, இந்திய டீமிற்கு எதிராக பீல்ட் செய்தார், நமது கிரிக்கெட் வீரர் ஹனுமந்த் சிங்.
இவர் தனது அறிமுக டெஸ்ட் மேட்சில், இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது ஒரே டெஸ்ட் சதத்தை எடுத்தார். அந்த இன்னிங்சில் அவர் எடுத்த ரன்கள் 105.
----------------
டக் வால்டர்ஸ்
ஆஸ்திரேலிய வீரர் டக் வால்டர்ஸ் (Doug Walters) முதல் கிரிக்கெட் வீரராக, டெஸ்ட் மேட்சில் ஒரு இன்னிங்சில் இரட்டை சதமும் அதே மேட்சில் இன்னொரு இன்னிங்சில் சதமும் எடுத்து சாதனைப் புரிந்தவர்.
மேற்கு இந்திய கிரிக்கெட் டீமிற்கு எதிராக சிட்னி மைதானத்தில் முதல் இன்னிங்சில் 242 ரன்களும் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 103 ரன்களும் குவித்தார். இவர் தனது முதல் இரண்டு டெஸ்ட் மேட்சுகளில் சதங்கள் அடித்தவர்.
நியூஸிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்டில் அவருடைய அதிக பட்சமாக 250 ரன்கள் குவித்துள்ளார்.
----------------
ஸ்டீவ் ஸ்மித்
சமீபத்திய சிட்னி டெஸ்டில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் ஆட்டக்காரரான முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது 30 வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் ஸர் டான் ப்ராட்மேன் எடுத்த அதிகப்படியான 29 டெஸ்ட் சதங்களை கடந்தார்.
ஒரு வேளை நடுவில் இடையூறுகளை சந்திக்காமல் இருந்திருந்தால், இந்த 30 வது சதத்தை முன்னரே எடுத்து மேலும் சதங்கள் குவித்து இருக்கலாம். இந்நிலையில், விரைவில் ஒய்வு பெற்றாலும் பெறுவேன் என்று சூசகமாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் மேட்ச்களில் இதுவரையில் 60.6-க்கு மேல் சராசரியும், 8500 ரன்களுக்கு மேலும் குவித்துள்ளார். நான்கு முறை இரட்டை சதங்கள் அடித்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிராக வாகா மைதானத்தில் எடுத்த 239 ரன்கள்தான் இவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர்.