'நான் பந்து வீசியிருந்தால்...' - ராஜஸ்தான் அணி குறித்து கோலி!

'நான் பந்து வீசியிருந்தால்...' - ராஜஸ்தான் அணி குறித்து கோலி!

ராஜஸ்தான் அணிக்கும் பெங்களூரு அணிக்குமிடையே நேற்று போட்டி நடந்து முடிந்தபின், பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி ராஜஸ்தான் அணி உடனான போட்டி குறித்து ஜாலியாக பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 2023, 16வது சீசன் தொடரின் 60வது ஆட்டம் நேற்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி ஃபாஃப் டு ப்ளசிஸ், க்ளென் மேக்ஸ்வெல் இருவரின் அதிரடி ஆட்டத்தால் 171 ரன்களை எடுத்து வலுவான இலக்கை எதிரணிக்கு நிர்ணயித்தது.

இதையடுத்து ராஜஸ்தான் அணி களமிறங்கிய நிலையில், இந்த இலக்கை ஈஸியாக சேஸ் செய்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெங்களூரு அணி வீரர்கள் முகம்மது சிராஜ், பர்னல், பிரேஸ்வெல், ஷர்மா, மேக்ஸ்வெல் என அனைவரும் சிறப்பாக பந்துவீசி ராஜஸ்தான் அணியை 59 ரன்களுக்குள் சுருட்டினர்.

இதைத் தொடர்ந்து பெங்களூரு அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர், பெங்களூரு அணி வீரர் விராட் கோலி, நான் பந்துவீசியிருந்தால், 40 ரன்னிற்குள் அவர்களை ஆல் அவுட் ஆக்கியிருப்பேன்' என்று ஜாலியாக கூறியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்த வீடியோ ஒன்றை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் போட்டி முடிந்தபின்னர், டிரெஸ்ஸிங் ரூமில், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், அனுஜ் ராவத், வான் பர்னெல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் போட்டி குறித்து தங்கள் கருத்துக்களை ஜாலியாக பேசியுள்ளனர். அப்படி பேசும்போதுதான், இந்த வீடியோவின் 37வது செகண்டில், கோலியும் அவ்வாறு பேசியுள்ளார். பொதுவாக, விராட் கோலி பந்து வீசுவது இல்லையென்பதால், அவர் நகைச்சுவையாக சிரித்தபடி இதைப் பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com