ஜிம்பாப்வே அணியை சுருட்டியது இந்தியா: டி20 அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி !

இந்திய  அணி
இந்திய அணி

உலகக் கோப்பை டி20 போட்டிகளின் சூப்பர் 12 சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 186 ரன்களை குவித்த இந்திய அணி, 115 ரன்களுக்குள் ஜிம்பாப்வே அணியை சுருட்டி அபார வெற்றி பெற்றுள்ளது.

உலகக் கோப்பை டி20 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ள நிலையில், நேற்றைய ஆட்டத்திலும் அபார வெற்றியை நோக்கி விளையாடியது. இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக விளையாடியது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தோல்வியைத் தவிர, இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் சிறப்பாகவே விளையாடி வருகிறது.

ஜிம்பாப்வே அணி
ஜிம்பாப்வே அணி

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் ரோகித் களம் இறங்கினர். ராகுல் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் ஆடிய ரோகித் 15 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் கோலி 26 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து சூர்யகுமார் களமிறங்கி ஜிம்பாப்வே பவுலர்கள் வெளுத்து வாங்கினார்.

இதற்கிடையில் அற்புதமாக ஆடி அரை சதம் அடித்த ராகுல் அவுட் ஆனார். ராகுல் 35 பந்தில் 51 ரன்கள் அடித்தார். இதில் 3 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து களமிறங்கிய பண்ட் 3 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 101 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. அடுத்து களமிறங்கிய பாண்டியா பொறுப்பாக கம்பெனி கொடுக்க, ஜிம்பாப்வே பந்து வீச்சை நொறுக்கினார் சூர்யகுமார். பாண்டியா கடைசி ஓவரில் 18 ரன்களில் அவுட் ஆனார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் 25 பந்துகளில் 61 ரன்களை விளாசினார். இதில் 4 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும்.

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்தது. ஜிம்பாப்வே தரப்பில் வில்லியம்ஸ் 2 விக்கெட்களையும், ராசா, நகரவா, முசரபானி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இதனையடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணியில் ராசா மற்றும் ரியான் பர்ல் அற்புதமாக ஆடி ரன்களை குவித்தனர். இருவரும் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் சேர்த்த நிலையில் பர்ல் 35 ரன்களில் அவுட் ஆனார். ஜிம்பாப்வே அணியில் ராசா(34) மற்றும் ரியான் பர்ல் (35) ரன்களை குவித்தனர். கடைசியாக ஜிம்பாப்வே அணி 17.2 ஓவர்களில் 115 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது.

இந்திய அணி 71 ரன்களில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில், அஸ்வின் 3 விக்கெட்களையும், ஷமி மற்றும் பாண்டியா தலா 2 விக்கெட்களையும், அர்ஷ்தீப், புவனேஷ்வர், அக்சர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஏற்கனவே தென்னாப்ரிக்கா நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் இந்தியா அரை இறுதிக்கு தகுதி பெற்றது . இந்த போட்டி இந்தியாவுக்கு மற்றுமொரு வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com