முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி!

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி!

மேற்கிந்தியதீவுகள் அணிக்கு எதிராக டொமினிகாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அஸ்வின் 12 விக்கெட்டுகளை சாய்த்த்தும், ஜெய்வால் அதிரடியாக ஆடி 171 ரன்கள் குவித்ததும் முதல் போட்டியின் சிறப்பு அம்சமாகும்.

போட்டியின் மூன்றாவது நாளில் மேற்கிந்திய தீவுகள் அணியைவிட 271 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்த நிலையில் இந்திய (442 ரன்களுக்கு 5 விக்கெட்) ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணியில் சந்தர்பாலும், கேப்டன் கிரெய்க் பிரெய்த்வைட் இருவரும் களத்தில் இறங்கினர். எனினும் ஜடேஜா, அஸ்வின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அந்த அணி 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சந்தர்பால், ஜடேஜாவின் பந்துவீச்சில் வீழ்ந்தார்.

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின், இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் வீசிய பந்தை அடித்து ரஹானேவிடம் காட்ச் கொடுத்து கிரெய்க் பிரெய்த்வைட் ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 32 இருந்த நிலையில் ஜெர்மைன் பிளாக்வுட் மற்றும் ரேமன் ரைஃபர் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

அடுத்து வந்த அலிக் அதானாஸே மற்றும் ஜோஷுவா டி சில்வா இருவரும் நின்று ஆடத் தொடங்கினர். ஆனால், சிராஜ் வீசிய பந்தில் ஜோஷுவா அவுட்டானார். இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி 78 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்திருந்தது.பின்னர் ஆடவந்த அல்ஜார்ரி ஜோசப் மற்றும் ஜாஸன் ஹோல்டர் இருவரும் அடித்து விளையாடத் தொடங்கினர். இருவரும் 100 ரன் இலக்கை எட்டிவிடுவார்கள் என நினைத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஜோசப் வீழ்ந்தார். அடுத்து ஆடவந்த ரக்கீம் கான்வால் விக்கெட்டையும் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சாய்த்தார். கென்னர் ரோச்சும் வெகுநேரம் நீடிக்கவில்லை. அதே ஓவரின் இறுதியில் அஸ்வின் பந்தில் வீழ்ந்தார்.

ஜோமல் வாரிகன் ஒரு சில பந்துகளை அடித்து விளையாடியபோதிலும் அவரும் வெகுநேரம் நீடிக்கவில்லை. அவரும் அஸ்வின் பந்துவீச்சில் அவுட்டானார்.மூன்றாவது நாள் ஆட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஜெய்வால் மற்றும் விராட் கோலியின் பேட்டிங்தான்.வெளிநாட்டில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த முதல் இந்தியர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார். அவர்திறமையாகவும், நிதானமாகவும் 387 பந்துகளை எதிர்கொண்டு 171 ரன்கள் குவித்தார்.

விராட் கோலி சிறப்பாக ஆடி 182 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் போட்டிகளில் 29 வது முறையாக அவர் 50 ரன்களைத் தாண்டியுள்ளார். இந்திய அணியில் ரன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர் உதவினார்.ஜடேஜா 37 ரன்களுடன் கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார். துணை கேப்டன் ரஹானே 11 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு ஆடி 3 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com