இந்தியா  அணிகள்
இந்தியா அணிகள்

தென் ஆப்பிரிக்க அணி 99 ரன்களில் சுருண்டது : ஒருநாள் தொடரை வென்றது இந்தியா!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.

இதன் படி டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால், தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்த மூன்றாவது ஒரு நாள் போட்டி ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் 99 ரன்களுக்கு சுருண்டது தென் ஆப்பிரிக்க அணி. இதனையடுத்தது இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியினை பெற்று கோப்பையை கைப்பற்றியது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் ஏற்கெனவே இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 2-1 வெற்றி என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

தொடக்க வீரர்களாக மலான் மற்றும் டி காக் களமிறங்கினர். இன்னிங்சின் 3-வது ஓவரில் வாசிங்டன் சுந்தர் பந்துவீச்சில் டி காக் 6 ரன்களில் அவேஷ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க வீரர்கள் மலான் (15 ரன்கள்) , ஹென்ரிக்ஸ் (3 ரன்கள்) , மார்க்ரம் (9 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையை கட்டினர்.

IND VS SA
IND VS SA

ஒருமுனையில் விக்கெட்கள் சரிந்தாலும் க்ளாஸென் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் மற்றொரு முனையில் தென் ஆப்பிரிக்கா அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. குறிப்பாக குல்தீப் யாதவ் சுழலில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா வீரர்கள் இமாட், நோர்ட்ஜெ ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் நடையை கட்டினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 27.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக க்ளாஸென் 34 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும், சுந்தர், சிராஜ், ஷபாஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி சுப்மன் கில் (49) மற்றும் ஷேரேயஸ் ஐயர் (28) ரன்கள் எடுத்து 19.1 ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 105 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியினை பெற்று தொடரை வென்றது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com