கோட்டை விட்ட பேட்ஸ்மேன்கள்! கோட்டை கட்டிய பவுலர்கள்! தொடரை கைப்பற்றியது இந்தியா!

கோட்டை விட்ட பேட்ஸ்மேன்கள்! கோட்டை கட்டிய பவுலர்கள்! தொடரை கைப்பற்றியது இந்தியா!

இந்தியா-இலங்கை அணிகள் மோதிவரும் 3 ஒரு நாள் கொண்ட போட்டித் தொடரில், நேற்று 2 வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ள நிலையில் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

டாஸை வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கினர். துவக்க ஆட்டக்காரர்களாக அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் நுவானிடு பெர்னாண்டோ இருவரும் இறங்கினர். நேற்றைய போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணியின் பவுலர்கள் மிகசிறப்பாக பந்து வீசினர் என்றுதான் சொல்ல வேண்டும். இலங்கை அணியின் நுவானிடு பெர்னாண்டோ மட்டும் ஓரளவுக்கு விளையாடி 50 ரன்களை சேர்த்தார். அவரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில், இந்திய அணியின் திறமையான பந்துவீச்சில், இலங்கை அணி 39.4 ஓவருக்கு 215 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து லெகுவான இலக்காக கருதப்பட்ட 215 ரன்களை மிக எளிதாக இந்திய அணி சேஸ் செய்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டம் இலங்கை வசம் மாறியது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா (17), சுப்மன் கில் (21), விராட் கோலி (4), ஸ்ரேயாஸ் ஐயர் (28) என மளமளவென விக்கெட்டுகள் பறிபோயின. இந்நிலையில் நிலைமையை உணர்ந்து பொறுமையாக விளையாடி கே.எல். ராகுல் 63 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இதைத் தொடர்ந்து 43.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்காத நிலையில், இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்து வீசியிருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com