3 பேர் அரைசதம்... அடுத்த வெற்றியை ருசித்த இந்திய அணி!

3 பேர் அரைசதம்... அடுத்த வெற்றியை ருசித்த இந்திய அணி!

இன்றைய டி20 உலகக்கோப்பை தொடரின் மற்றொரு ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியைப் பொறுத்தவரை, இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இதுவாகும்.

இதற்கு முன் இரு அணிகளும் 2 ஒருநாள் போட்டிகளில் சந்தித்துள்ள நிலையில், இரண்டிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.

டாஸை வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

kohli
kohlikohli

தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா களமிறங்கினர். கே.எல்.ராகுல் 9 ரன்கள் எடுத்த நிலையிலும், ரோஹித் சர்மா 53 ரன்கள் எடுத்த நிலையிலும் விக்கெட்டை பறிகொடுத்த நிலையில் விராட் கோலியும், சூர்யகுமார் யாதவும் களத்தில் கடைசி வரை நின்று விளையாடினர். இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது.

அடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணியின் வீரர்கள் யாரும் பெரிய அளவில் கைகொடுக்காத நிலையில் நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா 53 ரன்கள்,

விராட் கோலி 62 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 51 ரன்கள் என மூவரும் அரை சதத்தை கடந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா தனது 2வது வெற்றியை ருசித்தது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com