ஒருநாள் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்திய அணி இன்று வங்கதேசம் பயணம்

ஒருநாள் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்திய அணி இன்று வங்கதேசம் பயணம்

தற்போது இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர் போட்டியில் விளையாடி முடித்துள்ளது. இந்நிலையில், இந்திய அணி இன்று வங்கதேசம் பயணம் செய்ய உள்ளது.

தற்போது நடந்து முடிந்துள்ள டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், மற்ற இரண்டு போட்டிகளுமே மழையின் காரணமாக முடிவுகளின்றி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

ஒருநாள் தொடரைப் பொறுத்தவரை, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் ஆட்டம் சிறப்பாக அமையாததும் காரணமாக பார்க்கப்படுகிறது. அதிலும் சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கும் சரியில்லாதது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்ததது.

இந்நிலையில் ஒருநாள் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியதைத் தொடர்ந்து, இன்று வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

ரோஹித் சர்மா தலைமையில் பலம் வாய்ந்த அணியை பிசிசிஐ தேர்வுசெய்து அனுப்பியுள்ளது. அங்கு சென்றதும், இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரண்டு நாட்கள் பயிற்சிக்குப் பின்னர் வரும் 4ம் தேதி முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா-பங்களாதேஷ் அணிகள் மாேதுகின்றன. இந்திய அணியைப் பொறுத்தவரை சீனியர் வீரர்கள் இம்முறை அதிகம் இடம்பெற்றுள்ளனர். பங்களாதேஷை அவர்கள் சொந்த மண்ணில் ஜெயிப்பது சிரமமான காரியாக இருந்தாலும் இந்தியா வெற்றி பெறவும் அதிக வாய்ப்புள்ளது.

ரோஹித் சர்மா தலைமயில் களமிறங்கும் இந்திய அணியைப் பொறுத்தவரை, ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களமிறங்க, மூன்றாவது இடத்தில் விராட் கோலியும், கே,எல்,ராகுல் நான்காவது இடத்திலும், ஐந்தாவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும் ஆறாவது இடத்தில் ரிஷப் பண்டும் அதிகம் விளையாட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com