லடாக்கில் உயரமான கால்பந்து அரங்கம்!

லடாக்கில் உயரமான கால்பந்து அரங்கம்!

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைத்தளத்தில் அவ்வபோது புதுமையான தகவல்களை வெளியிட்டு பயனானர்களை பரவசப்படுத்துவதில் வல்லவர். மஹிந்திரா குழமத்தின் தலைவரான அவரது டுவிட்டர் செய்திகள் மிகவும் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். அவரது டுவிட்டர் பக்கத்தை ஒரு கோடி பேர் பின்பற்றி வருகின்றனர்.

இந்த முறை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் லடாக்கில் கட்டப்பட்டுள்ள புதிய மிகப்பெரிய கால்பந்து மைதானத்தின் படத்தை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்ல, புதிதாக கட்டப்பட்டுள்ள அந்த கால்பந்து மைதானத்தில் கால்பந்து போட்டியை காண ஆசையுடன் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

செயற்கை புல்தரைகள் மற்றும் ஆஸ்ட்ரோ-டர்ப் புல்தரைகளுடன் அமைந்துள்ள இந்த கால்பந்து விளையாட்டு அரங்கம் கடல் மட்டத்திலிருந்து 11,000 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கில் ஒரே சமயத்தில் 30,000 கால்பந்து ரசிகர்கள் அமர்ந்து விளையாட்டை கண்டு ரசிக்க முடியும். நாட்டின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள இந்த கால்பந்து அரங்கம், உலகில் உள்ள 10 பிரபலமான கால்பந்து அரங்கில் ஒன்றாக இருக்கும்.

இந்த கால்பந்து அரங்கத்தின் படத்தை வெளியிட்டுள்ள ஆனந்த் மஹிந்திரா, “படத்தை பார்த்தாலே வியப்பளிக்கிறதா, மூச்சு முட்டுகிறா” என்று கேள்வி எழுப்பியுள்ளார். உருளைக்கிழங்கு வறுவலை சுவைத்துக் கொண்டே டி.வி.யில் கிரிக்கெட் போட்டியை காண்பதற்கு பதிலாக ஒரு ஞாயிற்றுக்கிழமை இங்கு வந்து கால்பந்து போட்டியைக் நேரில் காண ஆர்வமுடன் காத்திருக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தை 2.23 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். 2,165 பேர் லைக்ஸ் போட்டுள்ளனர். 300-க்கும் மேலானவர்கள் பதில் டுவிட் போட்டுள்ளனர். பனிமூடிய லடாக்

மலைப்பகுதியில் கால்பந்து அரங்கத்தின் எழிலைக் கண்டு பலரும் வியப்பு தெரிவித்துள்ளனர்.

கால்பந்து சாம்பியன்களுக்கும், ரசிகர்களுக்கும் லடாக்கில் அமைந்துள்ள கால்பந்து விளையாட்டு அரங்கம் மிகவும் பிடிக்கும். ஏனெனில் கால்பந்து அரங்கத்தை பார்க்கவே ரம்மியமாக காட்சியளிக்கிறது என்று ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

கடல் மட்டத்துக்கு மேல் அழகாக அமைந்துள்ள இந்த விளையாட்டரங்கில் கால்பந்து போட்டியை பார்த்து ரசிப்பது எப்படிப்பட்ட மனநிறைவைத் தரும் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று மற்றொருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

கால்பந்து விளையாட்டு அரங்கத்தை பார்த்தாலே மலைக்க வைக்கிறது. விளையாட்டு நிகழ்ச்சியை பார்த்து ரசித்தாலே உடலில் புத்துணர்ச்சி ஏற்படும். அதற்கு நிகர் ஏதும் இல்லை. ஆனந்த் மஹிந்திரா சார்… விரைவில் உங்கள் கனவு பலிக்கட்டும் என்று மூன்றாவது நபர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த கால்பந்து அரங்கம் மத்திய அரசின் விளையாட்டு மற்றும் கலாசார துறையின் பெரு முயற்சியில் கேலோ இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டுள்ளது. செயற்கை புல்தரைகள் மூலம் ரூ.10.68 கோடி செலவில் இந்த அரங்கம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com