IPL 2023 : முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணிக்கு காத்திருக்கும் ஆப்பு!
ஐபிஎல் 16வது சீசன் தொடரின் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அதிலும் நேற்றை போட்டி முடிவின்படி, புள்ளிப்பட்டியலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதோடு, முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய ஐபிஎல் போட்டியின் 57வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைடன்ஸ் அணியும் மோதிய நிலையில், மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து, புள்ளிப்பட்டியலிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், குஜராத் அணி முதலிடத்தில் நிலைத்து நிற்குமா? என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.
அதன்படி, ப்ளே ஆஃப் சுற்றுக்குள் யார் யார் நுழைய வாய்ப்புள்ளது என்பதையும் இங்கே பார்க்கலாம்.
இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளின் படி, புள்ளிப்பட்டியலில், குஜராத் அணி 16 புள்ளிகளுடனும், சென்னை அணி 15 புள்ளிகளுடனும், மும்பை அணி 14 புள்ளிகளுடனும், ராஜஸ்தான் அணி 12 புள்ளிகளுடனும், லக்னோ அணி 11 புள்ளிகளுடனும், பெங்களூரு அணி 10 புள்ளிகளுடனும் முறையே முதல் 6 இடங்களில் இருக்கின்றன.
இதில் லக்னோ அணி, பெங்களூரு அணி 3 போட்டிகளிலும், மீதமுள்ள 4 அணிகளும் தலா 2 போட்டிகளிலும் விளையாட உள்ளன.
அதன்படி, முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ள அணிகள் மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் ஜெயிக்கும்பட்சத்தில், குஜராத் அணி 20 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்வதோடு, மற்ற மூன்று அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றில் நுழைந்துவிடும்.
அதேசமயம், குஜராத் அணி, சென்னை அணி இனிவரும் 2 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவும் பட்சத்தில், மும்பை அணி, ராஜஸ்தான் அணி, லக்னோ அணி அடுத்த 2 போட்டிகளிலும், வெற்றி பெறும் பட்சத்தில், மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறுவதோடு, இதுவரை முதலிடத்தைப் பிடித்துவந்த குஜராத் அணியின் முதலிடம் கனவு பறிபோகும்.

அதன்படி, குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் 16 புள்ளிகளுடன் இருக்கும் நிலையில், நெட் ரன் ரேட் விகிதப்படி, இரு அணிகளும் 2 மற்றும் 3ம் இடத்தைப் பிடிக்கும். அதேபோல், சென்னை அணி, லக்னோ அணி 15 புள்ளிகளுடன் இருக்கும் நிலையில், நெட் ரன் ரேட் விகிதப்படி இதில் ஒரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும்.
இப்படியும் இல்லாமல், குஜராத் அணி, சென்னை அணி இனிவரும் 2 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி, மும்பை அணி, லக்னோ அணி அடுத்த 2 போட்டிகளிலும், பெங்களூரு அணி மீதமுள்ள 3 போட்டிகளிலும், வெற்றி பெறும் பட்சத்தில், மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறுவதோடு, குஜராத் அணியும், பெங்களூரு அணியும் 16 புள்ளிகளுடன் இருக்கும் நிலையில், நெட் ரன் ரேட் விகிதப்படி, இரு அணிகளும் 2 மற்றும் 3ம் இடத்தைப் பிடிக்கும். அதேபோல், நெட் ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி, லக்னோ அணி இவற்றில் ஒரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும். ஒருவேளை இன்றைய போட்டியில் லக்னோ அணி ஹைதராபாத் அணியிடம் தோற்கும் பட்சத்தில் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவது உறுதியாகவும் வாய்ப்பு உள்ளது.