
நேற்றைய ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் தல தோனி, தமிழக வீரர் நடராஜன் மகளுடன் க்யூட்டாக விளையாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நேற்றைய ஐபிஎல் 16வது சீசன் போட்டியில் சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. டாஸை வென்ற கேப்டன் தல தோனி பவுலிங்கைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி, டெவன் கான்வேயின் அதிரடி ஆட்டத்தால், 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதன்பின், போட்டி முடிந்து தல தோனி, ஹைதரபாத் இளம் வீரர்களுடன் சற்றுநேரம் உரையாடினார். பின்னர் பிரபல ஜாம்பவான் வீரர்களையும் சந்தித்தார்.
அதையடுத்து, தமிழக வீரரான நடராஜன் குடும்பத்தை தோனி சந்தித்தார். அப்போது, தோனி நடராஜனின் மகளுடன் க்யூட்டாக பேச, அதற்கு நடராஜனின் மகள் மழலை மொழியில், அருமையாக பதில் அளிக்கிறார். அதன்பின்னர் தோனியும், நடராஜன் குடும்பமும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த க்யூட் வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்ட நிலையில், தற்போது இணையத்தில் வைரலாகி வெளியாகியுள்ளது.