IPL 2023 : ப்ளே ஆஃப் சுற்றுக்கு... நீயா நானா போட்டியில் 7 அணிகள்! சூடுபிடிக்கும் ஆட்டம்!

IPL 2023 : ப்ளே ஆஃப் சுற்றுக்கு... நீயா நானா போட்டியில் 7 அணிகள்! சூடுபிடிக்கும் ஆட்டம்!

ஐபிஎல் போட்டியின் 16 வது சீசன் தொடரில் தற்போதுவரை 61 போட்டிகள் முடிவடைந்துள்ளன. மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இன்னும் 9 போட்டிகள் நடைபெறவிருக்கும் நிலையில் ஒவ்வொரு ஆட்டமும் தற்போது விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் நடந்துவரும் போட்டிகளைப் பொறுத்து புள்ளிப்பட்டியலில் அணியின் தரவரிசை மேலும் கீழுமாக மாறிமாறி வருகிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு முன்னதாக இன்னும் 9 போட்டிகளே இருக்கும் நிலையில், இன்னும் 7 அணிகள் ப்ளே ஆஃப் சுற்றிற்குள் நுழைய நீயா நானா போட்டி போட்டு வருகின்றன. அதன் விவரங்களை இங்கு காணலாம்.

சமீபத்திய நிலவரப்படி, புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி முதலிடத்திலும், சென்னை அணி 2வது, மும்பை அணி 3வது, லக்னோ அணி 4வது முறையே உள்ளது.

இதில் ஹைதராபாத் அணி 11 போட்டிகளிலும், சென்னை, ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா அணிகள் தலா 13 போட்டிகளிலும், மீதமுள்ள அணிகள் 12 போட்டிகளிலும் விளையாடி புள்ளிப்பட்டியல் வரிசையில் இடம்பெற்றுள்ளன.

அதன்படி, மொத்தம் 9 போட்டிகள் இன்னும் மீதமுள்ள நிலையில், இனிவரும் ஒவ்வொரு அணியின் வெற்றி வாய்ப்பைப் பொறுத்து அதன் ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகும். அந்தவகையில் தற்போது 7 அணிகளுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது.

அதன்படி, இனிவரும் போட்டிகளில், குஜராத் அணி பெங்களூரு அணியையும், லக்னோ அணி மும்பை அணியையும், பெங்களூரு அணி ஹைதராபாத் அணியையும், ராஜஸ்தான் அணி பஞ்சாப் அணியையும், கொல்கத்தா அணி லக்னோ அணியையும், ஹைதராபாத் அணி குஜராத் மற்றும் மும்பை அணியையும், டெல்லி அணி பஞ்சாப் மற்றும் சென்னை அணியையும் வெற்றிகொள்ள வேண்டும்.

இவ்வாறு நடக்கும் பட்சத்தில், குஜராத் அணி 18 புள்ளிகளுடனும், சென்னை அணி 15 புள்ளிகளுடனும், லக்னோ அணி 15 புள்ளிகளுடனும், மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் தலா 14 புள்ளிகளுடனும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு போட்டியிடும்.

இவ்வாறு நடக்கும் பட்சத்தில், 4வது இடத்திற்கு 14 புள்ளிகளுடன் இருக்கும் 4 அணிகளும் நெட் ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் வாய்ப்பைப் பெறும்.

இனிவரும் போட்டிகளின் வெற்றி வாய்ப்பு இப்படித்தான் அமையும் என்பதில்லாமல், ஒவ்வொரு அணியின் வெற்றி வாய்ப்பைப் பொறுத்து, ஏற்கெனவே முதல் 4 இடத்தில் இருக்கும் அணிகளின் ப்ளே ஆஃப் வாய்ப்புகூட பறிபோகும் நிலையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com