IPL 2023 : தோல்விக்கு பழி தீர்க்குமா சிஎஸ்கே!

IPL 2023 : தோல்விக்கு பழி தீர்க்குமா சிஎஸ்கே!
Published on

இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி, முன்னதாக ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி தோல்வியைத் தழுவிய நிலையில், இன்று மீண்டும் மோதுகிறது.

ஐபிஎல் போட்டியின் 16 வது சீசன் 37 வது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த இரு அணிகளும் இந்த ஐபிஎல்லில் ஏற்கெனவே மோதிய நிலையில், முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவருக்கு 175 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிவாகை சூடியது.

இதனால் இந்த போட்டியில் எப்படியாவது சிஎஸ்கே அணி வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடும்.

அதேபோல் ராஜஸ்தான் அணியும் தற்போது இந்த போட்டியில் ஜெயிப்பதன் மூலம் புள்ளிப்பட்டியல் அடிப்படையில் முதலிடத்திற்கு செல்லும் வாய்ப்பு உள்ளதால் ராஜஸ்தான் அணியும் கடுமையாக போராடும்.

இந்த இரு அணிகளைப் பொறுத்தவரை இதுவரை 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், சென்னை அணி 15 முறையும், ராஜஸ்தான் அணி 12 முறையும் வென்றுள்ளனர்.

இருந்தும் இரு அணிகளும் நேருக்குநேர் விளையாடிய கடைசி 6 போட்டிகளில் சென்னை அணி ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது.

இரு அணிகளும் பலமுடம் காணப்பட்டாலும், இன்றைய போட்டி ஜெய்ப்பூரில் வைத்து நடைபெறுவதால், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு ராஜஸ்தான் அணிக்கு பக்கபலமாக இருக்கும். அதனால் இன்றைய போட்டி சற்று விறுவிறுப்பாகவே அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com