ஐ.பி.எல் கிரிக்கெட் மினி ஏலம்: டிசம்பர் 23-ல் கேரளாவில் நடக்கிறது!

ஐபிஎல் கிரிக்கெட் மினி ஏலம்
ஐபிஎல் கிரிக்கெட் மினி ஏலம்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் கொன்டாடப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் அடுத்த சீசன்,  2023 ஏப்ரலில் நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் ஐபிஎல் அடுத்த சீசன் போட்டிகளில் பங்குபெறும் வீரர்களுக்கான மினி ஏலம், கேரளாவில் கொச்சியில் டிசம்பர் 23-ம் தேதி  நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், அடுத்த ஐபிஎல் சீசனில் பங்கு பெறும் 10 அணிகளும், தாம் தக்க வைத்துகொள்ள விரும்பும் தங்கள் அணி வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ம் தேதிக்குள் முடிவுசெய்து அறிவிக்க வேண்டும் என ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் சென்ற ஆண்டிற்கான ஏலத்தொகை ரூ.90 கோடியாக இருந்த நிலையில், இவ்வாண்டு ரூ.5 கோடி அதிகரித்துள்ளது. 

logo
Kalki Online
kalkionline.com