ஐபிஎல்-லில் இந்த விஷயத்துல ரோகித் சர்மா டாப்ல இருக்காரா?

ஐபிஎல்-லில் இந்த விஷயத்துல ரோகித் சர்மா டாப்ல இருக்காரா?

நேற்றைய ஐபிஎல் போட்டி, பஞ்சாப்-மும்பை அணிக்கிடையே நடைபெற்ற நிலையில், ரோகித் சர்மா, சத்தமில்லாமல் ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 16வது சீசன் தொடரில் 46வது போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. இதில் டாஸை வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் ப்ரப்சிம்ரன் சிங் தவிர மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை எடுத்தனர். இதில், லிவ்விங்ஸ்டோன் அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 82 ரன்களைக் குவித்தார்.

இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி, 18.5 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்து, இந்த ஐபிஎல்-லில் தனது 5வது வெற்றியை ருசித்தது.

இந்தப் போட்டியில் மும்பை அணி சார்பில், இஷான் கிஷான் 41 பந்துகளில் 75 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 66 ரன்களும் எடுத்து ஆட்டத்தை அதிரடியாக நகர்த்திச் சென்றனர்.

இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், மும்பை அணி பேட்டிங் செய்தபோது, முதல் ஓவரை ரிஷி தவான் வீசிய நிலையில், 3வது பந்திலேயே துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, டக் அவுட்டாகி வெளியேறினார்.

இதன்மூலம், ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் 15வது முறையாக டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார். அதோடு, ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகமுறை டக் அவுட் ஆனவர்கள் வரிசையில் முதலிடத்திற்கு வந்துள்ளார்.

ஏற்கெனவே தினேஷ் கார்த்திக், மன்தீப் சிங் மற்றும் சுனில் நரைன் ஆகியோரும் 15 முறை டக் அவுட்டாகி முதலிடத்தில் இருக்கும் நிலையில், தற்போது ரோகித் சர்மாவும் இவர்களுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com