உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா?

தற்போது இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நாளை தொடங்க இருக்கிறது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி இடம்பெற வேண்டுமானால் மீதமுள்ள அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்திய அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) போட்டிக்கான பாய்ண்ட்ஸ் அடிப்படையில், 52.08% உடன் 4வது இடத்தில் உள்ளது. தற்போது ஆஸ்திரேலியா 75% -உடனும், சௌத் ஆப்ரிக்கா 60% -உடனும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. ஸ்ரீலங்கா 53.33% -உடன் 3வது இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில் இந்திய அணி WTC- போட்டியில் இறுதிப்போட்டியில் இடம்பெற வேண்டுமானால் தற்போது நடைபெறவிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆகவேண்டும். அதோடு, இந்த டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து, அடுத்து நடைபெறவிருக்கும் ஆஸ்திரேலியாவுடனான 4 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும். இந்த 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா WTC இறுதிப் போட்டிக்கு செல்ல வாய்ப்புள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, ஜூன், 2023 இல் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெறவிருக்கிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com