அது சச்சின் மகள் இல்லையாம்! பிரபல பாலிவுட் நடிகையாம்... முற்றுப்புள்ளி வைத்த இந்திய கிரிக்கெட் வீரர்!

அது சச்சின் மகள் இல்லையாம்! பிரபல பாலிவுட் நடிகையாம்... முற்றுப்புள்ளி வைத்த இந்திய கிரிக்கெட் வீரர்!

இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரர்களில் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்பவர் சுப்மன் கில். தற்போது 23 வயதாகும் சுப்மன் கில் 2019 முதல் இந்திய அணிக்காக விளையாடி வருபவர். 2020ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் தனக்கான ஒரு இடத்தையும் உறுதி செய்துவிட்டார்.

சுப்மன் கில்லுக்கு பெரிய எதிர்காலம் இருப்பதாக பலரும் கூறிவந்த வேளையில், சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கருடன் சுப்மனுக்கு தொடர்பு இருப்பதாக கிசுகிசு அலைகள் பரவி வந்ததும் பலருக்கும் தெரியும். பின்னர் இருவரும் தங்கள் வேலைகளில் கவனத்தை செலுத்தி வந்தனர்.

இது ஒருபுறமிருக்க, சமீபகாலமாகவே பாலிவுட் நடிகையான சாரா அலிகான் சுப்மன் கில் வாழ்க்கையில் வந்துள்ளார். பல இடங்களில் சுப்மன் கில்லுடன் சேர்ந்து டேட்டிங்கில் இருப்பதாக புகைப்படங்களும், வீடியோக்களும் வந்துகொண்டிருந்தன. இருவரும் குறித்து பல்வேறு தகவல்களும், வதந்திகளும் பரவிவந்த நிலையில், தற்போது சுப்மன் கில் தனது மௌனத்தை கலைத்து பதிலளித்துள்ளார்.

ப்ரீத்தி மற்றும் நீதி சிமோஸின் பிரபலமான பஞ்சாபி அரட்டை நிகழ்ச்சியான "தில் தியான் கல்லன்" இல் சுப்மன் கில் பங்கெடுத்தார். அதில் 'பாலிவுட்டில் சிறந்த நடிகை யார்?' என்று கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் தாமதிக்காமல் சாரா அலிகான் என்று உடனடியாக பதிலளித்தார்.

தொடர்ந்து, நீங்கள் சாராவுடன் டேட்டிங் செய்து வருகிறீர்களா? என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. அதற்கு சற்று யோசித்தவாறு, இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்றபடி அனைவரையும் குழப்பும் விதத்தில் பதிலளித்துள்ளார்.

இதன்மூலம், சுப்மன் கில் சாராவுடனான உறவை தன் வாயாலேயே உளறிக் கொட்டிவிட்டார். இதுகுறித்து சாரா அலிகானும் விரைவில் பேசுவார் என்று தெரியவருகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com