ஆறாவது வீரராக களம் இறங்கி அப்போதே... ஆஸ்திரேலிய அணியை திணறடித்தது இந்த வீரர்தான்!

ஆறாவது வீரராக களம் இறங்கி அப்போதே... ஆஸ்திரேலிய அணியை திணறடித்தது இந்த வீரர்தான்!

முதல் முறையாக இந்திய கிரிக்கெட் டீம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்தது 1947-48 ஆம் வருடம். 

இரண்டாவது முறையாக  சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு 1967- 68 ஆம் ஆண்டுதான் பயணித்தது. அப்போது அந்த சுற்றுப் பயணத்தில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடைபெற்றது.

நவாப் ஆப் பட்டோடி தலைமையில் இந்திய குழு பயணம் செய்த நிலையில், அந்த அணியில் 5 வேக பந்து வீச்சார்களும், 5 சூழல் பந்து வீசுபவர்களும் இடம் பெற்றிருந்தனர். தேவைப்பட்டால் பந்து வீச தேவையான மற்ற வீரர்களும் இடம் பெற்றிருந்தனர். 

எதிர்பாரதவிதமாக ஸ்பின் பவுலரான பி.எஸ்.சந்திரசேகர் காயம் காரணமாக இந்தியாவிற்கு திரும்ப  வேண்டியிருந்தது. இதனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூழல் பந்து வீசும் ஆட்டக்காரருக்கு பதிலாக, அவசர அவசரமாக ஆஸ்திரேலிய மண்ணில் சென்று இறங்கியவர், அனுபவ ஓப்பனிங் பேட்ஸ்மேன், ஹைதராபாத் வீரர் எம்எல் ஜெய்சிம்ஹா. இது யாருமே எதிர்பார்க்காத திருப்பம். 

கடைசி நேரத்தில் செல்ல வேண்டியிருந்ததால், எம்எல் ஜெய் சிம்ஹா விமானங்கள் மாறி மாறி செல்ல வேண்டியிருந்தது. 

சரிவர போதிய ஒய்வு இல்லாத போதும், ஜெய்சிம்ஹா தனது வெகுசிறப்பான பேட்டிங்கை இரண்டு இன்னிங்சிலும் வெளிப்படுத்தினார். 

அந்த குறிப்பிட்ட பிரிஸ்பேன் மூன்றாவது டெஸ்டில் ஜெய்சிம்ஹா மட்டும் தான் சதம் பதிவு செய்தார். 

முதல் இன்னிங்சில் அவர் 74 ரன்கள் குவித்தநிலையில், 2வது இன்னிங்சில் இவர் 101 ரன்கள் எடுத்து அசத்தினார்.

ஸ்பின் பவுலர் பிரசன்னா இந்த மேட்சில் மொத்தம் 8 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

அதுவும் எம்எல் ஜெய்சிம்ஹா துவக்க ஆட்டக்காரராக களமிறங்காமல் வழக்கத்திற்கு மாறாக இந்த முறை ஆறாவது வீரராக களம் இறங்கி, நிதானமாகவும் தேவைக்கு ஏற்ப அதிரடியவும் ஆடி, ரன்களைச் சேர்த்தார். இந்திய குழு இந்த மேட்சில் சிறப்பாக ஆட அவருடைய அனுபவம் பெரிதும் உதவியது.

இவருடன் மற்ற ஆட்டக்காரர்களும் தங்களது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினர். வெற்றி பெற நான்காவது இன்னிங்சில் 394 ரன்கள் தேவைப்பட்ட போதிலும், ஆஸ்திரேலிய அணியை திணற அடித்தனர். குறிப்பாக எம்எல் ஜெய்சிம்ஹா தனது அனுபவத்தை முழுவதும் உபயோகப்படுத்தி, தனி முத்திரைப் பதித்தார். 

இருந்து 39 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி அடைந்தது. 

இரண்டு இன்னிங்சிலும் எம்எல் ஜெய்சிம்ஹா, பட்டோடி, போர்டே இவர்களுடன் ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலிய பவுலர்களை அசர அடித்தார். 

எம்எல் ஜெய்சிம்ஹா 39 டெஸ்ட் மேட்சுகளில் 2056 ரன்கள் குவித்துள்ளார். இவற்றில் மூன்று சதங்கள் அடக்கம். ஒன்பது விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். தனது அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டு, குழுவின் நலனுக்காக ஆலோசனைகளையும் வழங்குவார். 

ml jaisimha
ml jaisimha

அவர் விளையாடிய கால கட்டத்தில், அவர் பேட்டிங் செல்ல போகும் பொழுது ஷர்ட் காலரை ஸ்டைல் ஆக தூக்கி விட்டு சென்று தனி பேஷனை ஏற்படுத்தியவர்.

ரஞ்சி கோப்பைக்காக ஹைதராபாத் மற்றும் தீலிப் கோப்பைக்காக தென் மண்டல அணிகளை  தலைமை  ஏற்று வழி நடத்தியவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com