கே.எல்.ராகுல் கேப்டன் பதவிக்கு பொருத்தமானவர்: கம்பீர் புகழாரம்!

கே.எல்.ராகுல் கேப்டன் பதவிக்கு பொருத்தமானவர்: கம்பீர் புகழாரம்!

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல், சமீபகாலமாக சரியாக விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் அவர் சரியாக விளையாடவில்லை. இதனால் அவரை முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் வரும் மார்ச் மாதம் 22 ஆம் தேதி முடிவுக்கு வரும் நிலையில், கே.எல்.ராகுல், இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிக்கு தயாராகி வருகிறார். லக்னெள சூப்பர் ஜெயன்டஸ் அணியின் தலைவரும் அவர்தான்.

கடந்த செவ்வாய்க்கிழமை லக்னெள அணிக்கான வீர்ர்களின் உடை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய அந்த அணியின் பயிற்சியாளரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கெளதம் கம்பீர், கே.எல்.ராகுலை புகழ்ந்து தள்ளினார். இந்திய அணிக்கு தலைமை ஏற்க சரியான தலைவர் ராகுல்தான். அவரிடம் நிலைத்தன்மையும் உள்ளது. சமச்சீர் நிலையும் உள்ளது என்றார் கம்பீர்.

ஒரு அணிக்கு கேப்டன்தான் முக்கியம். அவர்தான் அணியின் முன்னணி வீர்ர். அவருக்கு அணியினர் அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும். அணியின் கேப்டனுக்கு போட்டியில் ஜெயிப்பது உள்ளிட்ட பல நிர்பந்தங்கள் இருக்கும். ஆனால், அணியில் இடம்பெற்றுள்ள மற்ற வீரர்களுக்கு எந்த கவலையும் இல்லை. கேப்டனின் உடல்மொழி செயல்பாடுகளை வைத்தே அவர் எப்படி ஆடுவார் என்பதை கணித்துவிட முடியும் என்றார் கம்பீர்.

கே.எல்.ராகுல் அணித் தலைவராக இருப்பது நமக்கு கிடைத்துள்ள அதிர்ஷ்டம். அவரிடம் நிலைத்தன்மை உள்ளது. அதை நான் வரவேற்கிறேன். இது நல்லதுதான். நமக்கு நேர்மறையான விளைவுகளையே தரும் என்றும் கம்பீர் குறிப்பிட்டார்.

டி20 லீக் போட்டிகளில் கே.எல்.ராகுல் 109 போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். மொத்தம் 3,889 ரன்கள் எடுத்துள்ளார். அதாவது சராசரியாக 48.01 ரன்கள் எடுத்துள்ளார்.

16 வது ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி தற்போதைய சாம்பியன் குஜராத் டைட்டன் அணி, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகளுக்கிடையே ஆமதாபாதில் நடைபெறுகிறது.

ஏப்ரல் 1 ஆம் தேதி லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, தில்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டி லக்னெளவில் உள்ள ஏகனா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com