பார்வையாளர்கள் முன்பு குத்தாட்டம் போட்ட கோலி - இஷான்! வைரல் வீடியோ!

பார்வையாளர்கள் முன்பு குத்தாட்டம் போட்ட கோலி - இஷான்! வைரல் வீடியோ!

இந்தியா-இலங்கை அணிக்கான ஒரு நாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், ஈடன் கார்டன் மைதானம் மின்விளக்குகளால் ஜொலித்த நிலையில், கோலி - இஷான் இருவரும் குத்தாட்டம் போட்ட வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணி விளையாடி வரும் நிலையில், நேற்று இந்தியா-இலங்கை அணிக்கான 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில், ஏற்கெனவே இந்திய அணி முதல் போட்டியில் வென்ற நிலையில், நேற்றைய போட்டியிலும் வெற்றி பெற்றது. அதன்படி இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

இதையடுத்து, ஈடன் கார்டன் மைதானமே வண்ண மின்விளக்குகளால் மிகப்பிரம்மாண்டமாக மின்னியது. எதிர்பாராததை பார்த்ததுபோல் பார்வையாளர்களும் அந்த வண்ணக் காட்சிகளை பிரமிப்புடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் மைதானத்தில் வந்துகொண்டிருந்த கோலி-இஷான் இருவரும் சந்தோஷத்தின் வெளிப்பாடாக ஒரு அழகான ஆட்டத்தைப் போட்டு ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தினர்.

இது சம்பந்தமான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ...

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com