வாழ்வா? சாவா? போட்டியில் இன்று சிஎஸ்கே!
ஐபிஎல் 2023 16வது சீசன் லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 4 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், குஜராத் அணி மட்டுமே, முதலிடத்தைப் பிடித்து பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. மற்ற 3 இடங்களை எந்தெந்த அணி பிடிக்கப்போகிறது என்பதை இனிவரும் 4 போட்டிகள் மட்டுமே முடிவு செய்யவுள்ளது.
அதன்படி, இன்று மதியம் 3.30 மணிக்கு, அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் போட்டியில், சென்னை அணியும், டெல்லி அணியும் மோதவுள்ளன.
டெல்லி அணியைப் பொறுத்தவரை, தற்போது புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் ஜெயித்தாலும், அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய வாய்ப்பில்லை.
ஆனால், இந்தப் போட்டியில், ஒருவேளை டெல்லி அணி வெற்றிபெற்றால், சென்னை அணி ஏற்கெனவே உள்ள 15 புள்ளிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்புக்காக, மற்ற போட்டிகளின் முடிவுகளுக்காக காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படும்.
அதனால் இந்த போட்டி டெல்லி அணியைவிட, சென்னை அணிக்கு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அதேபோல் இன்றைய 2வது போட்டி, ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு லக்னோ, கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடக்கிறது.