ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோரை அடித்த லக்னோ அணி!

ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோரை அடித்த லக்னோ அணி!

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் லக்னோ அணி, பஞ்சாப் அணி மோதிய நிலையில், லக்னோ அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.

ஐபிஎல் 16வது சீசன் 38வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. டாஸை வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து, லக்னோ அணியின் கேஎல் ராகுல், கைல் மேயர்ஸ் இருவரும் களமிறங்கினர். அடித்து ஆடும் முனைப்போடு களமிறங்கி ஆடிய கேஎல் ராகுல் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 9 பந்துகளில் 12 ரன்களை எடுத்த நிலையில் எதிர்பாராதவிதமாக அவுட்டானார்.

அடுத்து மேயர்ஸ்ஸுடன் படோனி கைகோர்த்தார். இருவரும் சரியான பார்ட்னர்ஷிப்பை அமைத்து பவுலர்களை திணறடித்தனர். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், பூரன் இருவரும் அந்த இருவரையும் மிஞ்சும்படி அதிரடியை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை எட்டமுடியாத உயரத்திற்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து, மேயர்ஸ் 24 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 54, ரன்களும், படோனி 24 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 43 ரன்களும், ஸ்டாய்னிஸ் 40 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 72 ரன்களும், பூரன் 19 பந்துகளில் 7 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்ப 45 ரன்களும் எடுக்க, லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரைக் குவித்தது.

இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ஸ்கோர் அடித்த அணியின் வரிசையில் லக்னோ அணி 257 ரன்கள் அடித்து 2வது இடத்தைப் பிடித்தது. 263 ரன்களைக் குவித்து பெங்களூரு அணி முதலிடத்தில் இருந்து வருகிறது.

இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களமிறங்கியது.

இந்நிலையில் பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ப்ரப்சிம்ரன் 9 ரன்னிலும், ஷிகர் தவான் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய, டைட் 36 பந்துகளில் 66 ரன்களும், ராசா 22 பந்துகளில் 36 ரன்களும், லிவ்விங்ஸ்டோன் 14 பந்துகளில் 23 ரன்களும், சாம் கரண் 11 பந்துகளில் 21 ரன்களும், ஜிதேஷ் ஷர்மா 10 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தனர். இருந்தும் பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதையடுத்து லக்னோ அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன்மூலம் லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com